4வது திருமணத்தை தடுத்த மனைவி, மாமனார், மாமியாரை கொன்றவருக்கு தூக்கு
ஸ்ரீவில்லிபுத்தூர்:
நான்காவது கல்யாணம் செய்து கொள்வதைத் தடுத்த முதல் மனைவி, மாமனார், மாமியார் ஆகியோரை படுகொலை செய்தும்,மேலும் 3 பேரின் கை, கால்களை வெட்டியும் கொடுமைகள் செய்த நபருக்கு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்துள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை என்ற ஊரைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் 8 ஆண்டுகளில் 3 முறைகல்யாணம் செய்து கொண்டவர். இதுபோதாதென்று முதல் மனைவி பெருமாள் அம்மாளின் தங்கையையும் கல்யாணம் செய்துகொள்ள ஆசைப்பட்டார்.
தனது ஆசையை முதல் மனைவியிடம் தெரிவித்தார். இதற்கு அவர் மறுத்து விட்டார். அவரது தாய் வெள்ளியம்மாள், தந்தைதங்கையா ஆகியோரும் மாரிமுத்துவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதேபோல, 3வது மனைவி முருகேஸ்வரியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மாரிமுத்து கடந்த 1999ம் ஆண்டு முதல் மனைவி மற்றும் 3-வது மனைவியின் வீட்டைச் சேர்ந்த 6பேரை சரமாரியாக அரிவாளால் வெட்டினார்.
இதில் பெருமாள் அம்மாள், தங்கையா, வெள்ளியம்மாள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். முருகேஸ்வரி உள்ளிட்ட 3பேருக்கும் கை, கால்கள் துண்டிக்கப்பட்டன.
இதையடுத்து மாரிமுத்து கைது செய்யப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இந்தவழக்கில் இப்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நீதிபதி துரைசாமி தனது தீர்ப்பில் கூறியதாவது: மனைவி, மாமனார், மாமியார் உள்ளிட்ட 3 பேரை கொடூரமாக வெட்டிக் கொலைசெய்தும், மேலும் இன்னொரு மனைவி, அவரது உறவினர்கள் இரண்டு பேரின் கை, கால்களைத் துண்டித்தும் அவர்களதுவாழ்க்கையையே நாசம் செய்துள்ளார் மாரிமுத்து.
இதனால் அவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கிறேன் என்று தீர்ப்பளித்தார்.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications