ஜெவை பாராட்ட அப்பட்டமாய் பொய் சொல்லி இருக்கிறார் வாஜ்பாய்: வைகோ ஆவேசம்
வேலூர்:
ஜெயலலிதாவின் ஆட்சியில் தமிழகம் பெரும் வளர்ச்சியடைந்துளளதாக பிரதமர் வாஜ்பாய் பேசியது அப்பட்டமான பொய் என்றுமதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
சிறையில் இருந்து வெளியே வந்த வைகோ நிருபர்களிடம் பேசுகையில்,
நான் பிரதமர் வாஜ்பாய் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். ஆனால், கன்னியாகுமரியில் நடந்தக் கூட்டத்தில்ஜெயலலிதாவைப் பாராட்ட வேண்டும் என்பதற்காக, அவரது ஆட்சியின் கீழ் தமிழகம் மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளதாகவாஜ்பாய் பேசியதை ஜீரணிக்க முடியவில்லை. அது ஒரு அப்பட்டமான பொய்.
விசாரணை என்ற பெயரில் மயிலாடுதுறை, நாகப்பட்டனம் நீதிமன்றங்களுக்கு 47,500 கி.மீ. தொலைவுக்கு என்னைஅலைக்கழித்து தமிழக போலீஸார் சித்திரவதை செய்தனர். இந்த சித்திரவதைகளினால் எனது மன உறுதியை குலைக்க விடமுடியும் என அவர்கள் நினைத்தனர். அது நடக்கவில்லை. அது நடக்காது. சிறைவாசம் எந்த வகையிலும் என்னைமுடக்கிவிடவில்லை.
இது என் மன உறுதியை மேலும் கூட்டியிருக்கிறது. இனி, மேலும் வேகத்துடன் இந்த அராஜக அரசை எதிர்ப்பேன். பொடாவைதுஷ்பிரயோகம் செய்ததையும், ஜெயலலிதாவின் அரசியல் பழி வாங்கலையும் தேர்தல் பிரச்சாரத்தில் முன் நிறுத்திப் பேசுவோம்.
இந்த நிமிடத்திலிருந்து எனது தேர்தல் பிரசாரம் தொடங்குகிறது. இந்த ஆட்சியின் அவலத்தை மக்களிடம் அம்பலப்படுத்துவேன்.
தமிழகம் பெரியாரின் மண். அண்ணாவின் மண். இங்கு மதவாத சக்திகளுக்கு இடமே கிடையாது. அந்த சக்திகளை ஒடுக்கும்வகையில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் பிரச்சாரம் இருக்கும்.
சிறையில் எனக்கு எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. சிறையின் விதிமுறைகளை நான் எந்த காலகட்டத்திலும் மீறியதில்லை.இங்குள்ள 2,500 கைதிகளின் அன்புக்கும் பாத்திரமாகிவிட்டேன்.
ஈழத் தமிழர்களுக்குஆதரவு தெரிவிப்பதில் தவறில்லை, ஆனால் ஈழத் தமிழர் போராட்டத்தை ஊக்கப்படுத்துவதுதான் தவறுஎன்று உச்ச நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளதை இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன் என்றார் வைகோ.
-
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
அப்பா விட்டதை பிடிக்கும் மகள்.. மதுரை அரசியலில் கால் பதிக்கும் கயல்விழி அழகிரி! தவெக தான் அடுத்து? -
மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 எப்போது? பட்டென அப்டேட் கொடுத்த மரியவில்சன்! 2 வாரங்கள் கழித்தா? -
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங்












Click it and Unblock the Notifications