தலைமை தேர்தல் ஆணையராக கிருஷ்ணமூர்த்தி பதவியேற்றார்
டெல்லி:
தலைமைத் தேர்தல் ஆணையர் லிங்டோ நேற்று பதவி ஓய்வு பெற்றதையடுத்து புதிய தலைமைத் தேர்தல்ஆணையராக கிருஷ்ணமூர்த்தி இன்று பதவியேற்றார்.
பதவி ஓய்வு பெற்ற பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த லிங்டோ கூறியதாவது:
நான் அதிர்ஷ்டசாலி. என்னுடைய சக ஊழியர்கள் நல்ல முறையில் எனக்கு ஒத்துழைப்பு நல்கினார்கள். காஷ்மீர்மாநிலத்தில் வெற்றிகரமாக தேர்தல் நடத்தியதை மிகப் பெரிய சாதனையாகக் கருதுகிறேன்.
வாக்காளர் பட்டியல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் உள்ளிட்ட தேர்தல் நடைமுறைகள் குறித்து கருத்துகூறுவது போலத்தான், அரசியல்வாதிகளைப் பற்றி, அவர்கள் நாட்டைப் பீடித்துள்ள புற்றுநோய் என்று கூறினேன்.அதில் தவறு ஒன்றும் இல்லை.
ஓய்வு பெற்ற அதிகாரிகள் அரசியலுக்கு வருவது அதிகரித்து வருகிறது. அவர்களோடு பத்தோடு ஒன்றாய் நானும்உட்கார விருப்பமில்லை என்றார்.
லிங்டோவின் குறிப்பிடத்தகுந்த சாதனைகளில் காஷ்மீர் தேர்தலும், குஜராத் தேர்தலும் முக்கியமானவை. குஜராத்தேர்தலின்போது, அவருக்கும், பா.ஜ.கவுக்கும் பிரச்சனை எழுந்தது. எனினும், தேர்தலை நியாயமான முறையில்நடத்திக் காட்டினார்.
அடுத்த தலைமைத் தேர்தல் ஆணையராக தமிழ்நாட்டைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி இன்று பதவி ஏற்றார்.லிங்டோவின் ஓய்வால் காலியான மூன்றாவது ஆணையர் பதவிக்கு கோபால்சாமி என்ற ஐஏஎஸ் அதிகாரி பதவிஏற்றார்.
-
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது












Click it and Unblock the Notifications