இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: சந்திரிகா அதிரடி
கொழும்பு:
இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கலைத்துள்ளார்.
பாதுகாப்புத் துறையை சந்திரிகா தன்வசம் வைத்துக் கொண்டபோது, அவருக்கும், ரணிலுக்கும் இடையேயானஅதிகார மோதல் உச்சகட்டத்தை அடைந்தது. அதனையடுத்து புலிகளுடனான அமைதிப் பேச்சுவார்த்தையிலிருந்துநார்வே தூதுக்குழு விலகியது.
அதிகாரப் பங்கீடு தொடர்பாக சந்திரிகாவுக்கும், ரணிலுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைகள்தோல்வியடைந்தன.
இந் நிலையில், சந்திரிகா அதிபருக்கு உண்டான கூடுதல் அதிகாரத்தைப் பயன்படுத்தி, 225 உறுப்பினர்கள்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் அரசைக் கலைத்துள்ளார். ஏப்ரல் 2ம் தேதி பொதுத் தேர்தல்நடத்தப்படும் என்றும், ஏப்ரல் 23ம் தேதி புதிய அரசு பதவியேற்கும் என்றும் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தைக் கலைக்கும் முன்னர், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருவருக்கு அமைச்சர் பதவி அளித்துள்ளார்சந்திரிகா. அவரது வெளியுறவுத் துறை ஆலோசகர் லட்சுமண் கதிர்காமர் தகவல் தொலைத் தொடர்புத் துறைஅமைச்சராகவும், ஜெயரத்னே தபால் துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் அமைச்சரவையில் இடம்பெறுவது இலங்கை வரலாற்றில் இதுவே முதல்முறையாகும். தேர்தலுக்கு முன் தனது அதிகார பலத்தை அதிகரிக்கச் செய்யவே, சந்திரிகா இவர்களைஅமைச்சர்களாக்கியுள்ளதாகத் தெரிகிறது.
-
அரசுப் பேருந்து 1 km ஓடினால் ரூ.53 நட்டம்.. தனியார்மயமாகிறதா போக்குவரத்து துறை? மரிய வில்சன் சிக்னல் -
2021ல் ஸ்டாலினின் திமுக வெள்ளை அறிக்கை vs 2026ல் விஜய்யின் தவெக வெள்ளை அறிக்கை.. ஒரு ஒப்பீடு -
60 வருடங்களில் தமிழகம் வாங்கிய கடனை விட திமுக அரசு 5 ஆண்டில் அதிக கடன் பெற்றுள்ளது - வெள்ளை அறிக்கை டேட்டா -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய்.. எந்த வகையிலும் நியாயமற்ற அணுகுமுறை.. ஏன்? -
தொடரும் மின்வெட்டு.. முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு! 15,000 ஊழியர்களை நியமிக்க ஆர்டர் -
தமிழ்நாட்டில் காலியாக உள்ள தொகுதிகள் எண்ணிக்கை 6 ஆக உயர்வு.. எந்தெந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்? -
எங்களை தொட்டுருக்கவே கூடாது குழந்தை.. தவெகவுக்கு அதிமுக பைனல் வார்னிங் -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
தமிழ்நாட்டுல இவ்வளவு பாலியல் வன்கொடுமை நடக்குது.. எங்கயா அந்த சிங்கப்பெண் படை.. தெறிக்கும் மீம்ஸ்! -
Mithun: எடப்பாடி பழனிசாமி மகன் மிதுனை அரசியலுக்கு அழைப்பது தவறு! ராஜசத்யன் கடும் எதிர்ப்பு -
சென்னையில் பில்டிங் கட்டுவோருக்கு மகிழ்ச்சியான செய்தி.. முதல்வர் விஜய் உத்தரவு -
விஜய்க்கு பெரிய நன்றி சொல்லியே ஆகணும்.. ஏனென்றால்? அவர் இல்லனா ... உருக்கமாக பேசிய பாரதிராஜா தம்பி












Click it and Unblock the Notifications