தேர்தல் பணிக் குழுக்களை அமைத்தது அதிமுக
சென்னை:
தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் குழுக்களை அதிமுகஅமைத்துள்ளது. சென்னைத் தொகுதிகளின் பொறுப்பாளராக அமைச்சர் பொன்னையனும், மதுரை,பெரியகுளத்திற்கு அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சட்டசபையில் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல்தெரிவிக்கப்பட்டுள்ளது.
40 தொகுதிகளுக்குமான தேர்தல் பணிக்குழுவுக்கு ஒரு அமைச்சர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.சென்னையில் உள்ள 3 தொகுதிகளுக்குமான குழுவுக்கு பொறுப்பாளராக நிதியமைச்சர் பொன்னையன் தலைவராகநியமிக்கப்பட்டு உள்ளார். துணைத் தலைவராக டாக்டர் மைத்ரேயன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை மற்றும் பெரியகுளம் தொகுதிகளுக்கான தேர்தல் பணிக்குத் தலைவராக ஓ.பன்னீர் செல்வம், துணத்தலைவராக எஸ்.என்.ராஜேந்திரனும் இருப்பார்கள்.
பாண்டிச்சேரி மற்றும் சிதம்பரம் தொகுதி தேர்தல் பணிக்குழுவுக்கு அமைச்சர் ஜெயக்குமார் தலைவராக இருப்பார்.
சிவகங்கை தொகுதி தேர்தல் பணிக் குழுவுக்கு அமைச்சர் செ.ம. வேலுச்சாமி தலைவராகவும், கோகுல இந்திராதுணைத் தலைவராகவும் இருப்பார்கள்.
சிவகாசி தொகுதியின் தேர்தல் பணிக்குழுத் தலைவராக அமைச்சர் இன்பத் தமிழன் நியமிக்கப்பட்டுள்ளார்.இத்தொகுதியில் வைகோ போட்டியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தேர்தல் குழுவினர் சம்பந்தப்பட்ட ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி கட்சிநிர்வாகிகளுடன் தொடர்பு கொண்டு பகுதி தேர்தல் பணிக்குழுக்களை உடனடியாக அமைத்திட வேண்டும் என்றுஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் இந்தப் பணிக்குழுக்களில் இடம் பெற வேண்டும் என்றும் இந்தப் பகுதிபணிக்குழுக்களின் பெயர் பட்டியலை வரும் 16ம் தேதிக்குள் கட்சித் தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்கவேண்டும் என்றும் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
-
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications