நாமக்கல்லில் 50 கோழிகள் பலி: பறவைக் காய்ச்சல் காரணமா?
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் 2 கோழிப் பண்ணைகளில் 50க்கும் மேற்பட்ட கோழிகள் திடீரென்று இறந்தன. இவற்றின்சாவுக்கு பறவைக் காய்ச்சல் வைரஸ் காரணமல்ல என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். கடும் வெயிலுக்குத்தான் இவைஇறந்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
நாமக்கல் மாவட்டம் சானார்புதூர், பெரியமணலி ஆகிய பகுதிகளில் உள்ள கோழிப் பண்ணைகளில் 50க்கும்மேற்பட்ட கோழிகள் திடீரென்று இறந்தன. இதனால் அந்தக் கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் பரவி விட்டதோஎன்ற பீதி எழுந்தது.
இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் மாணிக்கம் கூறுகையில், நாமக்கல்பிராந்தியத்தில் 39 டிகி அளவுக்கு வெயில் கொளுத்துகிறது. இந்த வெயிலில் கோழிகளால் உயிர் வாழவேமுடியாது. எனவே வெயிலுக்குத்தான் இந்தக் கோழிகள் இறந்திருக்கின்றன. 2 கோழிகள் ஹெபாடிடிஸ் வைரஸ்தாக்கி இறந்துள்ளன.
இறந்த கோழிகளில் பெரும்பாலானவை பலவீனமானவை, ஆரோக்கியமான நிலையிலும் இல்லை. இதன்காரணமாக பாக்டீயா தொற்று ஏற்பட்டு அவை இறந்திருக்க வேண்டும் என்றார்.
பறவை காய்ச்சல் இல்லை என்று தெரிந்தவுடன் இறந்த கோழிகளை அப்பகுதி விவசாயிகள் உடனடியாக சமைத்துசாப்பிட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. பறவைக் காய்ச்சல் பீதி இருப்பதால், இறந்த கோழிகளை உடனடியாகஎரித்து விடுங்கள் என்று அதிகாரிகள் யோசனை தெரிவித்துள்ள நிலையிலும், அதைப் பற்றிக் கவலைப்படாது,இறந்த கோழிகளை அப்பகுதியினர் சமைத்து விட்டனர்.
இதுவரை இந்தியாவில் குறிப்பாக கோழிப் பண்ணைகள் அதிகம் இருக்கும் நாமக்கல் பிராந்தியத்தில்பறவைக்காய்ச்சல் வைரஸ் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications