தேர்தல் பயத்தால் 999 பேருக்கு மீண்டும் வேலை: எதிர்க்கட்சிகள்
சென்னை:
தேர்தலில் தோல்வியுற்று விடுவோம் என்ற பயத்தின் காரணமாகவே டிஸ்மிஸ் செய்யப்பட்ட 999 அரசுஊழியர்களையும் மீண்டும் வேலையில் சேர்ப்பதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளதாக எதிர்க்கட்சித்தலைவர்கள் கூறியுள்ளனர்.
999 அரசு ஊழியர்களையும் புதிய தண்டனையுடன் மீண்டும் வேலையில் சேர்ப்பதாக முதல்வர் ஜெயலலிதா இன்றுசட்டசபையில் அறிவித்தார். இது குறித்து திமுக துணைத் தலைவர் துரைமுருகன் கருத்து தெரிவிக்கையில், தேர்தல்பயம், தோல்வி ஜூரம் ஆகியவையே இந்த அறிவிப்புக்குக் காரணம். மொத்தத்தில் அரசு ஊழியர்களிடம் அரசுஒரு வழியாக சரண்டர் ஆகி விட்டது என்றார்.
காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் கூறுகையில், இது இயற்கையான ஆணை அல்ல. தேர்தல் பயம்காரணமாகவே முதல்வர் இவ்வாறு அறிவித்துள்ளார் என்றார்.
பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி கூறுகையில், டிஸ்மிஸ் செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் நீதிமன்றத்துக்குப் போனகாரணத்தினாலும், தேர்தல் காரணமாகவும் மிரண்டு போய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் முதல்வர்என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் பழனிச்சாமி கூறுகையில், 4 ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வு ரத்து என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அரசு ஊழியர்கள் மீது இன்னும் அவர் பழிவாங்கும் எண்ணத்திலேயே இருப்பதையே இதுகாட்டுகிறது. அரசு ஊழியர்கள் மீது சுமத்தப்பட்ட தண்டனைகளை முழுமையாக விலக்கிக் கொள்ள வேண்டும்என்றார்.
எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
சட்டசபையில் ஜெயலலிதாவின் பதிலுரையைப் புறக்கணித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்றுவெளிநடப்புச் செய்தன.
கடந்த சில நாட்களாக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடந்தது.இதில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்ளவில்லை. ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் நடந்தவிழாக்களுக்கு அவர் சென்றதால் சபைக்கு வரவில்லை.
இந் நிலையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு ஜெயலலிதா பதில்அளித்தார். கேள்விநேரம் முடிந்து, ஜெயலலிதா பதில் அளிக்க எழுந்தபோது, திமுக, பா.ம.க, காங்கிரஸ், இந்தியகம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் எழுந்து, வெளிநடப்புச் செய்வதாகக்கூறாமல் அவையை விட்டு வெளியேறினர்.
பின்னர் திமுக தலைவர் அன்பழகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆளுநர் உரை மீதான விவாதத்தில்எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் பேசினர். ஆனால் முதல்வர் ஜெயலலிதா விவாதத்தில் கலந்துகொள்ளவில்லை. சபைக்கும் வரவில்லை. இதன் மூலம் எதிர்க்கட்சியினரை அவர் மதிக்கவில்லை. இதனால்தான்ஜெயலலிதாவின் பதில் உரையைப் புறக்கணித்து வெளிநடப்புச் செய்தோம் என்றார்.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ












Click it and Unblock the Notifications