செலவைக் குறைக்க துரைமுருகன் தந்த "ஐடியா"!
சென்னை:
தமிழக அரசுக்கு ரூ.1,500 கோடி செலவு ஏற்படுவதைத் தடுக்க சூப்பர் ஐடியா ஒன்றைத் தந்தார் சட்டசபை திமுகதுணைத் தலைவர் துரைமுருகன். இதற்கு ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பும், எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள்கைத்தட்டலையும் தெரிவித்தனர்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நேற்று நடந்தது. திமுக துணைத் தலைவர்துரைமுருகன் தனது பேச்சை நிறைவு செய்யும்போது, எதிர்க்கட்சியினர் அரசுக்கு உருப்படியாக யோசனை எதையும்சொல்வதில்லை, உருப்படியான அறிவுரைகளை சொல்வதில்லை என்று அடிக்கடி ஆளுங்கட்சியினர் வருத்தம்தெரிவிக்கின்றனர்.
அவர்களுக்கு ஒரு நல்ல யோசனையை நான் இப்போது சொல்கிறேன். இதைச் செய்தால் அரசுக்கு ரூ.1,500 கோடிசெலவு மிச்சமாகும். அதை வைத்து வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளலாம்.
ஒவ்வொரு முறையும் தேர்தல் நடத்தப்படும்போது ரூ. 1,500 கோடி செலவாகிறது. அதைத் தவிர்க்க, வருகின்றநாடாளுமன்றத் தேர்தலோடு, பேசாமல் சட்டசபைக்கும் தேர்தல் வைத்து விடலாம்.
அப்படிச் செய்தால், நமது அரசுக்கு ரூ. 1,500 கோடி மிச்சமாகும் என்று கூறி துரைமுருகன் உட்கார்ந்தபோதுஎதிர்க்கட்சியினர் மேசைகளைத் தட்டி ஆரவாரம் செய்தனர். ஆனால் ஆளுங்கட்சித் தரப்போ துரைமுருகனைகண்டித்து கோஷமிட்டது. அத்துடன் நேற்றைய விவாதம் முடிவுக்கு வந்தது.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications