"தண்டனையுடன்" 999 அரசு ஊழியர்களுக்கும் மீண்டும் வேலை!
சென்னை:
4 ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வு ரத்து என்ற புதிய தண்டனையுடன் டிஸ்மிஸ் செய்யப்பட்ட 999 அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களுக்கு மீண்டும் வேலை தரப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சட்டசபையில் ஆளுநர் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது கடந்த சில நாட்களாக விவாதம்நடந்தது. விவாதத்திற்கு ஜெயலலிதா இன்று பதிலளித்தார்.
தனது பதிலுரையில், வேலைநிறுத்தம் செய்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட 999 அரசு ஊழியர்கள் மற்றும்ஆசிரியர்களுக்கு மீண்டும் வேலை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு ஊதியஉயர்வு ரத்து செய்யப்படும்.
அதேபோல, பதவி இறக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு அந்த தண்டனை ரத்து செய்யப்பட்டு மீண்டும் பழையவேலையில் சேர்க்கப்படுவார்கள். அவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வு ரத்து செய்யப்படும். ஏற்கனவே 3ஆண்டு ஊதிய உயர்வு ரத்து செய்யப்பட்டவர்களுக்கு அது 1 ஆண்டாக குறைக்கப்படுகிறது.
மேலும் டிஸ்மிஸ் செய்யப்பட்டவர்கள் உள்ளிட்ட அனைத்து அரசு ஊழியர்களுக்கும் 3 சதவீத அகவிலைப்படிவழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வு இம்மாத பிப்ரவரி 1 முதல் கணக்கிடப்பட்டு வழங்கப்படும்.தொகுப்பூதியம் பெறுவோர்க்கும் இந்த உயர்வு அளிக்கப்படும்.
என்றார் ஜெயலலிதா.
நிலவரி ரத்து
மேலும் அவர் பேசும்போது, கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்து விட்டது. காவிரியிலும் உரிய நீர் வரவில்லை.இதனால் காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இதேபோல மாநிலத்தின் பிற பகுதிகளிலும் சரியான பருவ மழை இல்லாததால் விவசாயிகள் பெரும் பாதிப்பில்ஆழ்ந்துள்ளனர்.
இந் நிலையில் விவசாயிகளுக்கு ஓரளவு நிவாரணம் அளிக்கும் பொருட்டும், வறட்சியை சமாளிக்கு வகையிலும்,விவசாயிகளுக்கான நிலவரி ரத்து செய்யப்படுகிறது. ஜூலை 2004ம் ஆண்டு முதல் ஜூன் 2004ம் ஆண்டுவரையிலான காலத்திற்கு நிலவரி ரத்து அமலில் இருக்கும்.
காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறந்து விட மாநில அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளும் என்றார் அவர்.
-
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications