பா.ம.கவைத் தோற்கடியுங்கள்: ரஜினி ரசிகர்களுக்கு சத்யநாராயணா உத்தரவு

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்:

பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்களைத் தோற்கடிக்க வீட்டுக்கு வீடு சென்று ரஜினி ரசிகர்கள் பிரச்சாரம் செய்யவேண்டும் என்று ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் சத்யநாராயண ராவ் பகிரங்கமாக கூறியுள்ளார்.

பாபா பட வெளியீட்டின் போது பா.ம.கவினர் செய்த செயல்களை இன்னும் மறக்காத ரஜினி ரசிகர்கள் அதற்குப்பழி தீர்க்க வரும் நாடாளுமன்றத் தேர்தலைப் பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளனர். பாட்டாளி மக்கள்கட்சியின் பலம் அதிகம் உள்ள வட மாவட்டங்களில் உள்ள ரஜினி ரசிகர்கள் திரண்டு வருகிறார்கள், பிரச்சாரஉத்தியை வகுத்து வருகிறார்கள்.

இந் நிலையில் திருவண்ணாமலையில் செய்தியாளர்கள் கூட்டத்தின்போது ரஜினியை சேற்றில் விழுந்த பன்றி என்றுராமதாஸ் கூறியதாக தினமலர் பத்திரிக்கை செய்தி வெளியிட்டது, வெந்த புண்ணில் ஆசிட் ஊற்றிய கதையாகமாறியது.

கொந்தளித்துப் போன ரஜினி ரசிகர்கள் தமிழகத்தின் பல பகுதிகளிலும் ராமதாஸின் உருவ பொம்மைகளைக்கொளுத்தினர். நிலைமை எல்லை மீறிப் போவதைப் பார்த்து பயந்து போன ராமதாஸ், ரஜினி ரசிகர்கள்நல்லவர்கள், நான் ரஜினியை விமர்சிக்கவில்லை என்று சப்பைக் கட்டுக் கட்டினார்.இதனால் ராமதாஸின்கொடும்பாவியைக் கொளுத்த வேண்டாம் என்று ரஜினியும் பதிலுக்கு ரசிகர்களுக்குக் கோரிக்கை விடுத்தார்.

இந் நிலையில் ரஜினி ரசிகர்கள் ராமதாஸுக்கு எதிராக கடுமையாக பிரசாரம் செய்ய வேண்டும் என்று ரசிகர் மன்றஅகில இந்தியத் தலைவர் சத்யநாராயண ராவ் பகிரங்கமாக தெரிவித்துள்ளார். ரஜினியின் வலது கரமாகவும்,ரஜினிக்கு அடுத்து ரசிகர்களால் மதிக்கப்படுபவருமான சத்யநாராயண ராவ் இவ்வாறு கூறியுள்ளதால்,பா.ம.கவுக்கு எதிரான ரஜினி ரசிகர்களின் மனப்போக்கை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ரஜினி இருப்பதாகவேகருதப்படுகிறது.

விழுப்புரத்தில் நடந்த ரசிகர் மன்றக் கூட்டத்தில் சத்யநாராயண ராவ் கலந்து கொண்டார். அப்போது, பாட்டாளிமக்கள் கட்சி வேட்பாளர்களின் தோல்விக்காக நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். இதற்காக வீட்டுக்கு வீடுசென்று பிரச்சாரம் செய்ய வேண்டும். பிரச்சாரத்தின்போது வன்முறையோ, அநாகரிகமோ எட்டிப் பார்க்கக் கூடாது.மிகவும் அமைதியான முறையில், அதேசமயம், ஆணித்தரமான விதத்தில் உங்களது பிரசாரம் இருக்க வேண்டும்.

மிகத் தீவிரமாக பிரசாரம் செய்யுங்கள். பா.ம.க. வேட்பாளர்களைத் தோற்கடிக்க வேண்டியது உங்களது கடமைஎன்று ரசிகர்களிடையே பேசியுள்ளார்.

சத்யநாராயண ராவின் இந்தப் பேச்சு தமிழகம் முழுவதிலும் உள்ள ரஜினி ரசிகர்களுக்கும் பொருந்தும் என்றநிலையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ம.க. தனது அரசியல் எதிரிகளை மட்டுமல்லாது, ரஜினிரசிகர்களையும் சந்திக்க வேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே விடுதலைச் சிறுத்தைகள் ஒரு பக்கம், அதிமுக மறுபக்கம். விஜயகாந்த்தை ராமதாஸ் ஒரு முறை திட்டிவிமர்சித்ததால், அவரது ரசிகர்கள் வேறு ராமதாஸ் மீது காட்டமாக இருக்கிறார்கள். இந் நிலையில் ரஜினிரசிகர்களும் சேர்ந்து கொண்டுள்ளதால், சகட்டு மேனிக்கு அடி வாங்கப் போகிறது பா.ம.க. என்கிறார்கள் அரசியல்பார்வையாளர்கள்.

சேலத்தில் ரஜினி ரசிகர்கள் மீது கல்வீச்சு

இந் நிலையில் சேலத்தில் இன்று ஒரே நாளில் ரஜினி ரசிகர்களும், பா.ம.கவினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம், நாமக்கல் மாவட்ட ரஜினி ரசிகர்கள் சார்பாக பா.ம.கவைக் கண்டித்து, சேலத்தில் ஆர்ப்பாட்டம்நடத்தப்பட்டது. சேலம் கோட்டை மைதானத்தில் இருந்து வணிக வளாகம் வரை ரஜினி ரசிகர்கள் ஊர்வலமாகசென்றனர். பின்பு வணிக வளாகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். வன்முறை தூண்டும் அரசியல்வாதி,கொள்கை இல்லாத அரசியல்வாதி, பேசும்போது சிந்தித்துப் பேசுவீர் என்பது போன்ற கோஷங்களை எழுப்பினர்.

ரஜினி ரசிகர்களின் ஊர்வலத்தைத் தடை செய்யக் கோரி பா.ம.கவினர் செவ்வாய்பேட்டை தீயணைப்புநிலையத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை ஊர்வலம் சென்றனர். அங்கு கண்டன ஆர்ப்பாட்டம்செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+