என்னைப் போல் யாரும் உண்டோ? ஜெயலலிதா கேள்வி
சென்னை:
ஜாதி, மதத்துக்கு அப்பாற்பட்ட தலைவி நான் என முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் மகன் ஆனந்த பத்மநாபன்- காமினி அருண் ஆகியோருக்கும், முதல்வரின்கருப்புப் பூனைப் படையின் காவலர் உதயகுமார்- ஆர்த்தி ஆகியோருக்கும் இன்று சென்னை கலைவாணர்அரங்கில் ஜெயலலிதா தலைமையில் ஒரே மேடையில் திருமணம் நடந்தது.
திருமணங்களை நடத்தி வைத்து ஜெயலலிதா கூறுகையில்,
வாழ்க்கை என்பது நாம் மகிழ்ச்சியாய் வாழ்வதிலும், அதைவிட பிறரை நாம் மகிழ்ச்சியாய் வாழ வைப்பதிலும்தான் உள்ளது. தானும் மகிழ்ச்சியாய் வாழ்ந்து பிறரையும் மகிழ்ச்சிப்படுத்து தான் வாழ்வின் அர்த்தம்.
இன்று அமைச்சரின் மகன் திருமணத்தையும் எனது கருப்புப் பூனைப் படையின் காவலரின் திருமணத்தையும் ஒரேமேடையில் நடத்தி வைத்திருக்கிறேன். எந்தவித வேறுபாடும் இன்றி இந்தத் திருமணங்கள் நடந்தன.
பெரியவர், சிறியவர் பேதமோ, உயர்ந்தவர் தாழ்ந்தவர் பேதமோ எனக்கு என்றைக்கும் இருந்ததில்லை. இதற்குக்காரணம் என்ன?. ஜாதி, மதம் மற்றும் அந்தஸ்தை பார்க்காத தலைவி நான்.
இவ்வாறு வேற்றுமை பாராத இன்னொரு தலைவர் இந்தத் தமிழகத்தில் உண்டா?. ஜாதிகளுக்கு வாழ்வளிக்கிறதலைவர்கள் உண்டு. மதங்களிடம் ஓர வஞ்சனை உள்ள தலைவர்கள் உண்டு. ஆனால், ஜாதி, மத எல்லைகளைத்தாண்டிய தலைவியாக நான் விளங்குகிறேன். சமத்துவப் பார்வை கொண்ட தலைவி நான்.
நான் வேற்றுமை பாராத தலைவியாக இருப்பதால் தான் மக்களும் வேற்றுமை பாராது தங்கள் அன்மையும்நம்பிக்கையையும் என்னிடம் வைத்திருக்கிறார்கள் என்றார் ஜெயலலிதா.
முதல்வரின் கருப்புப் பூனைப் படையைச் சேர்ந்த உதயகுமாருக்கு தாய், தந்தை இல்லை. இதனால் அவருக்குமுதல்வர் ஜெயலலிதவே இந்தத் திருமண ஏற்பாட்டைச் செய்தது குறிப்பிடத்தக்கது.
கணிதமேதை ராமானுஜம் சிலை திறப்பு:
பின்னர் தலைமைச் செயலகத்தில் கணித மேதை ராமானுஜத்தின் சிலையை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications