டிஸ்மிசான ஊழியர்கள் வேலையில் சேர்ந்தனர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பணி நீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர்களுக்கு மீண்டும் வேலை வழங்கும் நியமன உத்தரவு இன்றுவெளியானதையடுத்து டிஸ்மிஸ் ஆன அரசு ஊழியர்கள் அனைவரும் வேலையில் சேர்ந்தனர். வேலையில்சேர்ந்ததையடுத்து, நீதிமன்றங்களில் தொடர்ந்த வழக்குகளை இவர்கள் வாபஸ் பெறுகின்றனர்.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட பதவி இறக்கத் தண்டனை ரத்து செய்யப்படுவதுடன்,ஊழியர்கள் அனைவருக்கும் 3 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா நேற்றுசட்டசபையில் அறிவித்தார்.

இதன்படி, டிஸ்மிசான ஊழியர்களை மீண்டும் வேலைக்குச் சேர்க்கும் பணி நியமன உத்தரவு மாவட்டஆட்சியர்களுக்கும், பிற துறை அதிகாரிகளுக்கும் இன்று அனுப்பி வைக்கப்பட்டது. அதனால் ஊழியர்கள்அனைவரும் இன்று முதல் வேலைக்குத் திரும்ப ஆரம்பித்துள்ளனனர்.

என்.ஜி.ஓ சங்கத் தலைவர் சூரியமூர்த்தி, அரசு ஊழியர் சங்கத் தலைவர் ஸ்ரீதரன், தலைமைச் செயலக ஊழியர்சங்கத் தலைவர் பாண்டுரங்கன், அரசு பணியாளர் சங்கப் பொதுச் செயலாளர் செளந்திரபாண்டியன் உள்ளிட்டசங்கத் தலைவர்களும் இன்று மீண்டும் பணியில் சேர்ந்தனர்.

இதனையடுத்து, தங்களை பணிநீக்கம் செய்தது செல்லாது பல்வேறு சங்கங்கள் நிர்வாகத் தீர்ப்பாயத்தில் தொடர்ந்தவழக்குகளை இவர்கள் வாபஸ் பெறுகின்றனர்.

கடந்த ஜூலை மாதம் முதல் கிட்டத்தட்ட 8 மாதங்களாக இந்த 999 அரசு ஊழியர்களின் குடும்பங்களும் சந்தித்தவேதனைகள், எதிர் காலம் குறித்த அச்சம் ஆகியவற்றை வார்த்தைகளில் விவரித்துவிட முடியாது. தேர்தல்நெருங்கும் நிலையில் எதிர்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றாய் கூடிவிட்டதால் ஒவ்வொரு ஓட்டையும் அதிமுகவிரட்டி, விரட்டி பிடிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதையே ஜெயலலிதாவின் இந்த நிலை மாற்றம்காட்டுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+