திருமாவளவன்-கிருஷ்ணசாமி- கண்ணப்பன் கூட்டணி உதயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பாளர் திருமாவளவன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷணசாமிஆகியோருடன் இணைந்து இன்று மூன்றாவது அணியை அமைத்தார் மக்கள் தமிழ் தேசம் கட்சியின் தலைவரும்முன்னாள் அமைச்சருமான கண்ணப்பன்.

கடந்த அதிமுக ஆட்சியில் முதல்வர் ஜெயலலிதா, சசிகலாவுக்கு அடுத்தபடியாக செல்வாக்குடன் திகழ்ந்தவர்கண்ணப்பன். பொதுப்பணித்துறை, மின்துறை ஆகியவற்றை கையில் வைத்துக் கொண்டு கோடிக்கணக்கில் பணம்பார்த்தார். அடுத்து வந்த திமுக ஆட்சியில் கவனிக்க வேண்டிய கவனித்து பெரிய அளவில் வழக்குகள் ஏதும்இல்லாமல் தப்பினார்.

இதையடுத்து ஜெயலலிதாவால் ஒதுக்கப்பட்ட இவர் கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் ஜாதிக் கட்சிகளுடன்ஜாதிக் கட்சியாக தானும் புகுந்து சில இடங்களை வாங்கினார். அந்தத் தேர்தலில் ஜாதிக் கட்சிகளுக்குஒட்டுமொத்தமாக அடி விழுந்தது. யாதவர் வாக்குகளை குறி வைத்து ஆரம்பிக்கப்பட்ட மக்கள் தமிழ் தேசமும்மண்ணைக் கவ்வியது.

இதையடுத்து பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ், மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன்ஆகியோருடன் இணைந்து ஜாதிக் கட்சிகளுக்கு ஒரு பேரவையை நடத்தி வந்தார் கண்ணப்பன். இந் நிலையில்நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கியதால் பா.ம.க. 6 சீட் வாங்கிக் கொண்டு அமைதியாகிவிட்டது.

ஆனால், கண்ணப்பனைக் கண்டு கொள்ள ஆள் இல்லை. இதனால் தேர்தலுக்குள் மீண்டும் ஜாதிக் கட்சிகளைஒன்றிணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் கண்ணப்பன்.

இவரைப் போலவே திமுகவால் கைவிடப்பட்ட திருமாவளவன், கிருஷ்ணசாமி ஆகியோருடன் சில வாரங்களாகதீவிர ஆலோசனையில் இருந்தார். கிருஷ்ணசாமி தனியே அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதையும் தடுத்துவிட்டகண்ணப்பன் இப்போது அவர்களுடன் இணைந்து இன்று புதிய கூட்டணியை ஆரம்பித்துள்ளார்.

தங்களது கூட்டணிக்கு மக்கள் கூட்டணி என்றும் பெயர் வைத்துள்ளனர் இந்த மூவரும். இதில் முடிந்தவரை பிறகட்சிகளையும் சேர்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பின்னர் மூவரும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர். அப்போது கிருஷ்ணசாமி கூறுகையில், வருகிற 15 அல்லது 16தேதிகளில் எங்கள் கூட்டணியில் இடம் பெறும் மற்ற கட்சிகள் குறித்து அறிவிப்பு வெளியிடுவோம் என்றனர்.

திருமாவளவன் பேசும்போது, பொருளாதார வேறுபாடுகளைக் களையவும், சமூக ஏற்றத் தாழ்வுகளை நீக்கவும்எங்கள் கூட்டணி பாடுபடும். பா.ஜ.கவுடன் திமுக ரகசிய உறவு பூண்டுள்ளது. அதனால்தான் பா.ஜ.க. போட்டியிடும்தொகுதிகளில் திமுக போட்டியிடாமல் கூட்டணி கட்சிகளுக்கு இடம் ஒதுக்கியுள்ளது. உண்மையான ஜாதிக்கட்சியான பா.ம.கவை பல்லக்கில் ஏற்றி திமுக சுமக்கிறது என்றார்.

கண்ணப்பன் கூறுகையில், 40 தொகுதிகளிலும் ஒரே சின்னத்தில் போட்டியிட நாங்கள் ஆலோசித்து வருகிறோம்.அதிமுக வலிவுடன் இருக்கும் 8 தொகுதிகளை திமுக தந்திரமாக காங்கிரஸிடம் தந்துள்ளது. மீதமுள்ள 2தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றியை எதிர்பார்த்துள்ளது என்றார்.

கண்ணப்பனிடம் கரன்சிக்கு பஞ்சமில்லை என்பதால் தேர்தலில் இந்த அணியும் பலமாக களமிறங்க வாய்ப்புள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+