39 இலங்கை அமைச்சர்களின் பதவி பறிப்பு: சந்திரிகா அதிரடி
கொழும்பு:
இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயின் காபந்து அரசில் இடம் பெற்றிருக்கும் 39 அமைச்சர்களை அதிபர்சந்திரிகா குமாரதுங்கா பதவி நீக்கம் செய்துள்ளார்.
அதிபருக்கும், பிரதமருக்கும் இடையே நடந்து வரும் அதிகாரச் சண்டையின் உச்ச கட்டமாக, கடந்தசனிக்கிழமையன்று நாடாளூமன்றத்தைக் கலைத்துவிட்டு, ஏப்ரல் 2ம் தேதி தேர்தல் நடத்தப் போவதாக சந்திரிகாஅறிவித்தார்.
இந் நிலையில், தேர்தல்வரை காபந்து அரசாக செயல்பட்டு வரும் ரணிலின் அமைச்சரவையிலிருந்து, காபினட்அந்தஸ்து பெறாத 27 அமைச்சர்களையும், 12 இணையமைச்சர்களையும் இன்று பதவி நீக்கம் செய்துள்ளார்சந்திரிகா. பதவி நீக்கம் தொடர்பான கடிதங்கள் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இத் தகவலை அதிபரின் ஜனதேசா பெரீஸ் நிருபர்களிடம் தெரிவித்தார். நாடாளுமன்றம்கலைக்கப்பட்டதையடுத்து, தனக்கு இருக்கும் விசேஷ அதிகாரத்தைப் பயன்படுத்தி, காபினட் அந்தஸ்து இல்லாதஅமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய சந்திரிகா முடிவெடுத்ததாக பெரீஸ் கூறினார்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால், காபினட் அந்தஸ்து இல்லாத அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்வதுஇலங்கையில் வழக்கமான நடைமுறையாகும்.
இத்தகைய அரசியல் ஸ்திரத்தன்மையற்ற சூழ்நிலையிலும், போர் நிறுத்தத்தை தொடர்ந்து கடைபிடிப்போம் என்றுவிடுதலைப்புலிகள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications