நகை, பைக்குக்காக முரண்டு பிடித்த மாப்பிள்ளை: திருமணத்துக்கு வந்தவர் மணமகனானார்
சென்னை:
3 பவுன் நகை மற்றும் மோட்டார் சைக்கிள் வாங்கித் தராததால் தாலி கட்ட மறுத்த மணமகனை உதறித் தள்ளி விட்டுகல்யாணத்திற்கு வந்திருந்த தனது தூரத்து உறவினரைத் திருமணம் செய்து கொண்டார் சென்னையைச் சேர்ந்தபெண்.
சென்னை சாலிகிராமம் விஜயராகவபுரம் பகுதியைச் சேர்ந்த செந்தூர் கனி என்ற பெண்ணின் மகள் ஜெயலட்சுமி(25).
தந்தையை இழந்த ஜெயலட்சுமி வீட்டிற்கு 3வது மகள் ஆவார். கணவன் இல்லாத நிலையிலும், மிகுந்தசிரமத்திற்கிடையே தனது 2 மகள்களுக்கும் திருமணம் செய்து வைத்த செந்தூர் கனி, தனது 3வது மகளானஜெயலட்சுமிக்கும், முருகேசன் என்ற அரசுப் பேருந்து ஒட்டுநருக்கும்திருமணம் நிச்சயம் செய்தார்.
வரதட்சணையாக 37 பவுன் நகைகள், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றைக் கொடுப்பதாக உறுதியளித்திருந்தார்செந்தூர் கனி. நேற்று திருமணம் நடப்பதாக இருந்தது.
இந் நிலையில் முந்தைய நாள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அந்த சமயத்தில், முருகேசனின் தாயார்சென்டம்மாள், செந்தூர் கனியிடம் வந்து நகைகள் வாங்கியதற்கான ரசீதுகள், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றைக்காட்டுமாறு கூறினார்.
அதற்கு செந்தூர் கனி, 34 பவுன் நகைகளை மட்டுமே திரட்ட முடிந்தது. மீதமுள்ள 3 பவுன் நகை மற்றும் மோட்டார்சைக்கிளை இன்னும் 10 நாட்களுக்குள் ரெடி செய்து கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.
அவ்வளவுதான், ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றார் சென்டம்மாள். 3 பவுன் நகை மற்றும் மோட்டார் சைக்கிளைஉடனே கொடுக்க வேண்டும் இல்லாவிட்டால் கல்யாணம் நடக்காது என்று திட்டவட்டமாக் கூறிவிட்டார்.
அம்மாவின் பேச்சுக்கு மாடு மாதிரி தலையாட்டிய மாப்பிள்ளை முருகேசனும் நகை, மோட்டார் சைக்கிளைகொடுத்தால்தான் தாலி கட்டுவேன் என்று கறாராக கூறி விட்டார்.
அத்தோடு நில்லாமல், மண்டபத்தையும் காலி செய்து கொண்டு கிளம்பினர் மாப்பிள்ளை வீட்டார்.
அதிர்ந்து போயினர் பெண் வீட்டார். அந்தச் சமயத்தில்தான் துணிச்சலான முடிவை எடுத்தார் ஜெயலட்சுமி.இப்போதே இப்படி என்றால் திருமணத்திற்குப் பிறகு தனது வாழ்க்கை நரகமாகி விடும் என்பதை உணர்ந்த அவர்இந்த மாப்பிள்ளையே வேண்டாம் என்று கூறி விட்டார்.
பெண்ணின் முடிவை கேட்ட தாயாரும், உறவினர்களும் என்ன செய்வது என்று புரியாமல் தவித்தனர். அப்போதுபெண்ணின் உறவினர் ஒருவர், திருமணத்திற்கு வந்துள்ள நமது சொந்தத்திலேயே ஒரு மாப்பிள்ளையைப் பார்த்துகுறித்த முகூர்த்தத்தில் திருமணத்தை நடத்தி விடலாம் என்று யோசனை கூறினார்.
இதையடுத்து திருமணத்துக்கு வந்திருந்த தூரத்து சொந்தக்காரரான தாமரைக்கண்ணனிடம் சென்று,ஜெயலட்சுமியைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கோரியுள்ளனர்.
மொய் எழுதி விட்டுச் செல்வதற்காக வந்திருந்த தாமரைக்கண்ணன், பெண் வீட்டாரின் தர்மசங்கடமான நிலையைஉணர்ந்து, கோரிக்கையை உடனடியாக ஏற்றுக் கொண்டு திடீர் மாப்பிள்ளை கோலம் பூண்டார்.
இதைத் தொடர்ந்து நேற்று குறிப்பிட்ட முகூர்த்த நேரத்தில் திருமணம் நல்லபடியாக நடந்றிேயது.
அதன் பின்னர், விருகம்பாக்கம் போலீஸில் பெண் வீட்டார் புகார் கொடுத்தனர். "முன்னாள்" மாப்பிள்ளைமுருகேசன் வீட்டாரிடம் கொடுத்த வரதட்சணைப் பணத்தைத் திரும்பப் பெற்றுத் தருமாறு அதில் கோரியிருந்தனர்(மண்டபத்தைக் காலி செய்து கொண்டு போகும்போது பெண் வீட்டார் கொடுத்த பணத்தையும் லவட்டிச்சென்றிருந்தது முருகேசனின் குடும்பம்).
இதையடுத்து போலீஸார் பேச்சு நடத்தி ரூ.30,000 வரதட்சணைப் பணத்தை திரும்பப் பெற்றுக் கொடுத்தனர்.
திடீர் மாப்பிள்ளையான தாமரைக்கண்ணனுடன் அவரது பெற்றோர் கூட திருமணத்துக்கு வரவில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது. ஜெயலட்சுமியின் திருமணத்துக்கு இவர் மட்டுமே வந்திருதார். வந்த இடத்தில் திருமணமேமுடித்துக் கொண்டு திரும்பினார்.












Click it and Unblock the Notifications