மதுரை: சு.சுவாமிக்கு எதிராக நடராஜன் போட்டி
மதுரை:
மதுரை தொகுதியில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி போட்டியிட ஜெயலலிதா ஆதரவு தந்தால்,சுவாமியை எதிர்த்து நான் போட்டியிடுவேன் என்று முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவர்நடராஜன் எச்சரித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் நடராஜன் பேசுகையில், மதுரை தொகுதியில் போட்டியிட ஆதரவு தருமாறுஅதிமுகவிடம் சுப்பிரமணியம் சுவாமி பகிரங்கமாக கோரி வருகிறார். ஆனால் இதே சுவாமிதான், 1999ம் ஆண்டில்தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேற காரணமாக இருந்தார்.
எனவே சுவாமிக்கு அதிமுக ஆதரவு தரக் கூடாது. மதுரை தொகுதியையும் ஜனதாக் கட்சிக்கு ஒதுக்கக் கூடாது. மீறிஒதுக்கினால், நான் மதுரை தொகுதியில் சுவாமியை எதிர்த்துப் போட்டியிடுவேன். அதிமுகவினரின் ஆதரவுஎனக்குக் கிடைக்கும்.
புதுக்கோட்டை தொகுதியில் திருநாவுக்கரசர் போட்டியிட அதிமுக முட்டுக் கட்டை போடக்கூடாது. அந்தத்தொகுதியை பா.ஜ.கவுக்கு ஒதுக்க வேண்டும். இல்லாவிட்டால் அங்கு அதிமுக ஜெயிக்க முடியாது.திருநாவுக்கரசருக்கு டிக்கெட் கிடைத்தால்தான் அங்கு ஜெயிக்க முடியும். அவரது ஆதரவு இல்லாத யாரும் அங்குவெல்ல முடியாது என்றார் நடராஜன்.
முன்னதாக உடல் நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் சபாநாயகர்சேடப்பட்டி முத்தையாவை சந்தித்து நலம் விசாரித்தார் நடராஜன்.
நடராஜனை விட்டு மனைவி சசிகலா பிரிந்து வெகு காலமாவது குறிப்பிடத்தக்கது. இப்போது தனதுஇனிஷியலைக் கூட சசிகலா மாற்றிக் கொண்டுவிட்டார். என். சசிகலா என்பதை மாற்றி, தனது தந்தை, தாயாரின்பெயர்களின் முதல் எழுத்துக்களை இனிஷியலாகப் போட்டு வருகிறார்.
இருப்பினும் சசிகலாவின் மறைமுக ஆதரவு இருப்பதால் நடராஜனுக்கு பணத்துக்கோ, அதிகாரத்துக்கோ பஞ்சமேஇல்லை. இனிஷியல் மாற்றம் கூட அம்மா மனதைக் குளிர்விக்கத் தான் என்கிறது போயஸ் கார்டன் பட்சி.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்!












Click it and Unblock the Notifications