அவதூறு வழக்கு: திருமாவளவன் மனு டிஸ்மிஸ்
சென்னை:
அவதூறு வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க மறுத்த கீழ் கோர்ட் நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக் கோரியவிடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் திருமாவளவனின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம்டிஸ்மிஸ் செய்தது.
கடந்த 2000மாவது பிப்ரவரி மாதம் 22ம் தேதி மற்றும் மார்ச் 1 ஆகிய இரு தேதிகளிலும், சென்னை மாநகரகாவல்துறை ஆணையராக இருந்த காளிமுத்து மற்றும் சில காவல்துறை அதிகாரிகள் குறித்து திருமாவளவன்அவதூறாகப் பேசியதாகக் கூறி சென்னை நகர அரசு வழக்கறிஞர், 2000மாவது ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ம் தேதிசென்னை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த அவதூறு வழக்கை மாவட்ட நீதிமன்றம், 3-வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்றியது. தன்னை இந்தவழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரி திருமாவளவன் 3வது கூடுதல் நீதிமன்றத்தில் முறையிட்டார்.ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திருமாவளவன் மனு செய்தார். அதில், பாதிக்கப்பட்டவர்கள் சார்பில்என் மீது புகார் தரப்படவில்லை. மேலும், அவதூறு வழக்குகளை பதிவு செய்வதற்கான கால அவகாசத்தைத் தாண்டிஇந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே இந்த வழக்கை விசாரிக்க செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. எனவே தன்னை இந்தவழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அசோக் குமார், திருமாவளவனின் கோரிக்கை ஏற்கக் கூடியதாக இல்லை.பாதிக்கப்பட்டவர்தான் மனு கொடுக்க வேண்டும் என்பதில்லை. 3 ஆண்டுகளுக்குள் அவதூறு வழக்குகளைப் பதிவுசெய்யலாம் என சட்ட விதி உள்ளது. ஆனால் இந்த வழக்கில் 6 மாதங்களுக்குள் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளதால் விதி மீறல் நடைபெறவில்லை என்று கூறி திருமாவளவனின் மனுவைத் தள்ளுபடி செய்தார்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications