அதிமுக- பாஜக தொகுதி உடன்பாடு சிக்கல் தொடர்கிறது
சென்னை:
பா.ஜ.க. கேட்கும் தொகுதிகளைத் தர அதிமுக மறுத்து வருவதால் தொகுதி உடன்பாடு ஏற்படுவதில் தொடர்ந்துசிக்கல் நீடித்துக் கொண்டுள்ளது.
குறிப்பாக மத்திய அமைச்சர் திருநாவுக்கரசரின் புதுக்கோட்டை தொகுதியை தரவே முடியாது என அதிமுகதிட்டவட்டமாகக் கூறிவிட்டது. துணைப் பிரதமர் அத்வானி, பா.ஜ.க. தலைவர் வெங்கைய்யா நாயுடு ஆகியோர்எவ்வளவோ கெஞ்சியும் அந்தத் தொகுதியைத் தர முடியாது என முதல்வர் ஜெயலலிதா கூறிவிட்டார்.
இதனால் திருநாவுக்கரசரை சமாதானப்படுத்தும் முயற்சிகளில் பா.ஜ.க. ஈடுபட்டுள்ளது. இந்த வேலை மூத்ததலைவர்களான பிரமோத் மகாஜனும் அருண் ஜேட்லியும் ஆகியோரிடம் தரப்பட்டுள்ளது. இந்த இருவரும்திருநாவுக்கரசரிடம் பேசி வருகின்றனர்.
கடந்த தேர்தலில் கோவை, நாகர்கோவில், நீலகிரி, திருச்சி, சிவகங்கை, தென்காசி ஆகிய 6 தொகுதிகளில்போட்டியிட்ட பா.ஜ.க, முதல் மூன்று தொகுதிகளில் வென்றது. இம்முறை குறைந்தபட்சம் 10 தொகுதிகளையாவதுகேட்கிறது. பா.ஜ.க. கேட்கும் தொகுதிகளில் கடந்த முறை போட்டியிட்ட 6 தவிர தென் சென்னை, மதுரை,புதுக்கோட்டை, மயிலாடுதுறை ஆகியவை அடக்கம்.
ஆனால், 6க்கு மேல் தர முடியாது என்று அதிமுக கூறிவிட்டது. மிஞ்சிப் போனால் கூடுதலாக ஒன்று தரப்படும்என்றும் கூறிவிட்டது.
சில நாட்களுக்கு முன் நான்காவது சுற்று பேச்சு நடத்திய பா.ஜ.க. தேர்தல் குழுவினரான ராதாகிருஷ்ணன்,இல.கணேசன், நம்பியார் ஆகியோர், புதுக்கோட்டை தான் இல்லங்கிறீங்க, அப்ப 10 தொகுதியாவது கொடுங்கஎன்று அதிமுக தேர்தல் குழுவினரான அமைச்சர்கள் பன்னீர்செல்வம், ஜெயக்குமார், பொன்னையனிடம் கூற,அதை அப்படியே தங்கள் தலைவிக்குத் தெரிவித்தார்களாம்.
கடுப்பான ஜெயலலிதா, 10 தொகுதி கனவெல்லாம் காண வேண்டாம் என்று பா.ஜ.கவுக்கு துண்டு ஒன்று வெட்டுஇரண்டாக பதில் அனுப்பினாராம்.
இதனால் உடன்பாடு ஏற்படுவதில் சிக்கல் நீடித்துக் கொண்டுள்ளது.
இதற்கிடையே வேட்பாளர்களைத் தேர்வு செய்ய 15 பேர் கொண்ட குழுவை அமைத்துவிட்டு அதிமுகவை நோக்கிவைத்த கண் விலகாமல் பார்த்துக் கொண்டுள்ளனர் தமிழக பா.ஜ.கவினர்.
இந் நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், பாதுகாப்பு அமைச்சருமான ஜார்ஜ்பெர்னாண்டஸ், பா.ஜ.க. தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் இன்று இரவு சென்னை வருகின்றனர். கூட்டணிதொடர்பாக ஜெயலலிதாவையும் அவர்கள் சந்திக்கக் கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications