சென்னை திமுக வேட்பாளர் நேர்காணல் தேதி மாற்றம்
சென்னை:
சென்னையில் உள்ள 3 எம்.பி தொகுதிகளுக்கும் போட்டியிட மனு செய்துள்ள திமுகவினரிடம் முன்புஅறிவிக்கப்பட்டிருந்த 13ம் தேதிக்குப் பதில்14ம் தேதி மாலை நேர்காணல் நடைபெறும் என்று திமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் திமுக போட்டியிடும் 15 எம்.பி. தொகுதிகளுக்கும் போட்டியிட விரும்பும் திமுகவினரிடமிருந்துமனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீது தற்போது நேர்காணல் நடந்து வருகிறது.
சென்னையில் உள்ள தென் சென்னை, வட சென்னை, மத்திய சென்னை தொகுதிகளுக்குப் போட்டியிட விரும்பிவேட்பு மனு செய்துள்ளவர்களிடம் 13ம் தேதியன்று நேர்காணல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.தற்போது அந்தத் தேதி மாற்றப்பட்டு 14ம் தேதி மாலை 4 மணிக்கு முரசொலி மாறன் வளாகத்தில் நேர்காணல்நடக்கும் என்று திமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.
நிர்மலா பெரியசாமியின் அரசியல் ஆசை:
இதற்கிடையே சன் டிவியில் செய்தி வாசிக்கும் வணக்...கம் புகழ் நிர்மலா பெரியசாமி திருச்செங்கோட்டில் திமுகசார்பில் போட்டியிட மனு தாக்கல் செய்து, பின்னர் அதைத் திரும்பப் பெற்றுவிட்டார்.
இது குறித்து அவர் கூறுகையில், என் மீது அபிமானம் கொண்ட உறவினர்கள் தான் எனக்காக மனு செய்தனர்.ஆனால், அரசியல் பணி என்றால் அதில் முழுமையாக ஈடுபட வேண்டும். அதற்கு இப்போது நான் தயாராகஇல்லாததால் மனுவை வாபஸ் பெறுமாறு கேட்டுக் கொண்டேன் என்றார்.
-
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications