சிகிச்சை தர முடியுமா, இல்லை அரிவாளால் வெட்டவா?
கோவை:
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த வயல் வேலை செய்யும்பெண், தனக்கு சிகிச்சை அளிக்க மறுத்த டாக்டரை அரிவாளால் வெட்டி விடுவதாகக் கூறி மிரட்டியதால் அங்குபெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி அருகே உள்ள குரும்பப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அமுதா. இவர் வயல் வேலை செய்துவருகிறார். இவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. ஆனால் வேலைக்குப் போகாமல் இருக்க முடியாதுஎன்பதால் பொள்ளாச்சி மருத்துவமனையில் மருந்து வாங்கிக் கொண்டு வேலைக்குப் போகத் திட்டமிட்டுக்கிளம்பினார்.
இடுப்பில் நெல் அறுக்கும் கருக்கரிவாளை சொறுகிக் கொண்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு வந்தார்அமுதா. அங்கும் கூட்டம் அதிகமாக இருந்தது. வேலைக்கு நேரமாகி விடுமே, கூலி போய் விடுமே என்று பயந்தஅமுதா, சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த டாக்டர் காஜா மொய்தீன் என்பவரிடம் சென்று, ஐயா, நான் வயல்வேலைக்குச் செல்ல வேண்டும், எனவே எனக்கு முதலில் சிகிச்சை கொடுங்கள் என்று கோரியுள்ளார்.
ஆனால் வரிசையில்தான் அனைவரும் வர வேண்டும் என்று டாக்டர் கூறியுள்ளார். ஆனால் அதைக் கேட்காதஅமுதா தான் வேலைக்கு செல்ல வேண்டும் என்பதால் முதலில் சிகிச்சை கொடுக்குமாறு தொடர்ந்துவலியுறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த டாக்டர் வரிசைக்குச் செல்லுமாறு கூறி சப்தம் போட்டுள்ளார்.
அவ்வளவுதான், கொந்தளித்து விட்டார் அமுதா. இடுப்பில் இருந்த அரிவாளை எடுத்து டாக்டர் முன் காட்டிஇப்போது சிகிச்சை கொடுக்க முடியுமா, முடியாதா என்று ஆவேசமாக கேட்டுள்ளார். அரண்டு போன டாக்டர்அலறவே அருகில் இருந்தவர்கள் அமுதாவைப் பிடித்து சமாதானப்படுத்தி அமர வைத்தனர்.
அதற்குள் போலீஸாருக்குத் தகவல் போகவே, அவர்கள் விரைந்து வந்து அமுதாவைக் கைது செய்தனர்.
-
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications