அமைதி ஒப்பந்தத்தை மறு பரிசீலனை செய்யும் சந்திரிகா
கொழும்பு:
விடுதலைப் புலிகளுடன் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே செய்த போர் நிறுத்தத்தை மறு ஆய்வு செய்யகுழு ஒன்றை நியமிக்க அதிபர் சந்திரிகா குமாரதுங்கா நியமித்துள்ளார்.
அதிபரின் பாதுகாப்புச் செயலாளர் சிரில் ஹெரால்ட், தரைப்படை, விமானப்படை மற்றும் கடற்படை உயர்அதிகாரிகள் அந்தக் குழுவில் இடம் பெறுவார்கள். ஆனால், குழுவில் விடுதலைப் புலிகள் இடம் பெறுவார்களாஎன்பதைப் பற்றி எந்தவித தகவலும் இல்லை.
ரணில் மேற்கொண்ட அமைதி ஒப்பந்தம் பிரயோஜனமற்றது என்று கூறியுள்ள சந்திரிகா, அமைதிநடவடிக்கைகளில் தானே ஈடுபடப் போவதாகவும் அறிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை நாடாளுமன்றத்தை கலைத்த சந்திரிகா நேற்று 39 அமைச்சர்களை பதவி நீக்கம் செய்தார். இந்நிலையில், இன்று அவர் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைகள் இலங்கை அரசியலில் பெரும் புயலைக்கிளப்பியுள்ளது.
இதற்கிடையே, விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அமைச்சர் மிலிந்தா மாரகோடா (ரணில்ஆதரவாளர்) தன்னை அமைச்சர் பதவியிலிருந்து விடுவிக்குமாறு ரணிலிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கைஅரசியலமைப்புச் சட்டப்படி, அமைச்சரை நீக்கும் அதிகாரம் அதிபருக்கே உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
சந்திரிகாவின் அடுத்தடுத்த நடவடிக்கைகளின் விளைவாக, இலங்கைக்கு அளிப்பதாக இருந்த 176 மில்லியன்டாலர் கடனுதவியை நிறுத்தி வைக்கப் போவதாக உலக வங்கி அச்சுறுத்தியுள்ளது. இதனால் இலங்கைப்பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடையும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, இடைத்தேர்தல்அறிவிக்கப்பட்டவுடன் பங்கு சந்தையில் 10 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டது.
இந் நிலையில், சந்திரிகாவுக்கு ரணில் எழுதியுள்ள கடிதத்தில், தங்களது இந்த நடவடிக்கைகள் அமைதிநடவடிக்கைகளில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 30 ஆண்டுகளாக நிலவி வந்த உள்நாட்டுப் போரைமுடிவுக்குக் கொண்டு வரும் வகையில் ஏற்படுத்தப்பட்ட அமைதி ஒப்பந்தத்தை பாதுகாக்க முடியாத நிலைக்குஉங்களது நடவடிக்கைகள் தள்ளியுள்ளன என்று சந்திரிகாவுக்கு தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications