உசிலம்பட்டியில் 23,000 போலி வாக்காளர்கள்!
மதுரை:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தொகுதிக்கு சற்றும் சம்பந்தமில்லாத 23,000 பேர் போலி வாக்காளர்களாகசேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களை பட்டியலில் இருந்து நீக்கிய தேர்தல் ஆணையம், தவறுக்குக் காரணமானஅதிகாரியை சஸ்பெண்ட் செய்யவும் உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள மக்கள் தொகையை விட வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகமாகஇருப்பதாக தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் புகார் அனுப்பப்பட்டது.
இதேபோல, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இது போலவே போலி வாக்காளர்கள் அதிக அளவில்சேர்க்கப்பட்டுள்ளதாகவும் புகார்கள் எழுந்தன.
இதையடுத்து சென்னை மாவட்டத்தில் உள்ள14 சட்டசபைத் தொகுதிகள், உசிலம்பட்டி, குளச்சல் ஆகியதொகுதிகளின் வாக்காளர் பட்டியலை முழுமையான மறு ஆய்வு செய்ய தலைமைத் தேர்தல் ஆணையம்உத்தரவிட்டது.
இதையடுத்து அதிகாரிகள் இந்தத் தொகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலை சரி பார்த்துவருகின்றனர். அப்போது உசிலம்பட்டியில் 23,000 போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து இவர்களை அதிகாரிகள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கினர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் தொகுதிக்கு சற்றும் சம்பந்தம் இல்லாதவர்கள், இவர்கள் உசிலம்பட்டியிலேயேவசிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போலி வாக்காளர்கள் சேர்ப்புக்கு உசிலம்பட்டி தாலுகா அலுவலக அதிகாரி ராமசாமி தான் காரணம் என்றுதேர்தல் ஆணையம் கண்டுபிடித்தது. இதையடுத்து இவரை பணியிலிருந்து தற்காலிகமாக நீக்க மதுரை மாவட்டஆட்சித் தலைவர் சந்திரமோகனுக்கு கமிஷன் பரிந்துரைத்தது.
இதையடுத்து ராமசாமி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
அதே போல கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மற்றும் சிவங்கை மாவட்டம் மானாமதுரையிலும் வாக்காளர்எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளதால் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை பிரச்சனை:
ஆனால், சென்னையில் போலி வாக்காளர்கள் விவகாரம் ஒரு புறம் இருக்க, ஒட்டு மொத்தத்தில் வாக்காளர்எண்ணிக்கை தேசிய சராசரியைவிடக் குறைவாகவே உள்ளதும் தெரியவந்துள்ளது. இப்போது சென்னையில்வாக்காளர்கள் எண்ணிக்கை 22.73 லட்சமாகவே உள்ளது.
-
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications