மதிமுக வேட்பாளர்கள்: நாளை மறுதினம் அறிவிக்கிறார் வைகோ
சென்னை:
மக்களவைத் தேர்தலில் மதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச் செயலாளர்வைகோ நாளை மறுதினம் அறிவிக்கிறார்.
ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் மதிமுகவுக்கு சிவகாசி, வந்தவாசி, திருச்சி, பொள்ளாச்சி ஆகிய தொகுதிகள்ஒதுக்கப்பட்டுள்ளன. இத் தொகுதிகளில் போட்டியிட விரும்புவர்கள் கடந்த 9, 10 தேதிகளில் தங்களது மனுக்களைதாக்கல் செய்தனர்.
வைகோ தலைமையில் வேட்பாளர் நேர்காணல் நேற்று தொடங்கியது. இன்றும் நேர்காணல் தொடர்கிறது. இந்நிலையில் மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது:
வருகிற 14ம் தேதி கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் புதிய நிர்வாகிகளைவைகோ அறிவிப்பார். மேலும், மக்களவைத் தேர்தலுக்கான மதிமுக வேட்பாளர்களை பொதுக்குழு கூட்டத்தில்முடிவு செய்து, வைகோ அறிவிப்பார்.
19ம் தேதி அண்ணா நகரில் கட்சியின் நிதியளிப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு வைகோ பேசுகிறார். 28ம் தேதிஅவரது சொந்த ஊரான கலிங்கப்பட்டி செல்கிறார். தேர்தல் பிரச்சார பயணத் திட்டம் குறித்து திமுக தலைவர்கருணாநிதியுடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும் என்றார்.
வேட்பாளர் நேர்காணல் நடைபெறுகிறது என்றாலும், எந்தெந்த தொகுதிகளில் யார் யார் போட்டியிடுவது என்பதுஏறத்தாழ முடிவாகிவிட்டது என்று மதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிவகாசியில் வைகோவும், திருச்சியில் எல்.கணேசனும் போட்டியிடுவார்கள் என்றும், வந்தவாசியில் முன்னாள்மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரனும், பொள்ளாச்சித் தொகுதியில் டாக்டர் கிருஷ்ணனும் நிறுத்தப்படலாம்என்றும் கூறப்படுகிறது.
இதனால் முன்னாள் அமைச்சரும் பொருளாளருமான கண்ணப்பனுக்கு இந்தமுறை போட்டியிட வாய்ப்பில்லாமல்போய்விட்டது.
வைகோ-நெடுமாறன் சந்திப்பு:
இதற்கிடையே இன்று வைகோவை தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் அவரது இல்லத்தில் சந்தித்துவாழ்த்து தெரிவித்தார்.
வைகோவைப் போலவே பொடாவில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தவர் நெடுமாறன் என்பதுநினைவுகூறத்தக்கது. நெடுமாறனுடன் கைதான சுப.வீரபாண்டியனும், ராஜ்குமார் விடுதலையில் முக்கிய பங்குவகித்த தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, விடுதலை ராஜேந்திரன், புலவர்பச்சையப்பன் ஆகியோரும் வைகோவைச் சந்தித்தனர்.
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications