தமிழக எல்லையில் வீரப்பன்: கர்நாடக அமைச்சர் தகவல்
குல்பர்கா:
தமிழக, கர்நாடக எல்லைப் பகுதியில் வீரப்பன் நடமாட்டம் இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளதாக கர்நாடகஉள்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
குல்பர்காவில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கர்நாடக, தமிழக எல்லைப் பகுதியான ஜேவர்கி என்றஇடத்தில் வீரப்பன் நடமாட்டத்தை சிலர் பார்த்துள்ளதாக அதிரடிப்படைக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்துஅப்பகுதிக்கு கூடுதல் அதிரடிப்படையினர் அனுப்பப்பட்டுள்ளனர்.
வீரப்பன் இருக்கும் இடம் தெரிந்துள்ளதால் அப்பகுதியில் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது. வீரப்பன்விரைவில் பிடிபடுவான் என்றார் கார்கே.
வைர வியாபாரிகளிடம் ரூ.26 லட்சம் கொள்ளை: வீரப்பன் கும்பல் கைவரிசை?
மைசூர் அருகே வைர வியாபாரிகளிடம் ரூ.26 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இதற்கு வீரப்பன் கும்பல்காரணமா என்று போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.
பெங்களூரில் இருந்து கேரள மாநிலம் தலைச்சேரிக்கு கேரள அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. இதில் வைரவியாபாரிகள் இருவரும், மீன் வியாபாரிகள் இருவரும் பயணம் செய்துள்ளனர். பஸ் பிடாடி என்ற ஊர் அருகேசென்று கொண்டிருந்தபோது, பஸ்சுக்குள் இருந்து 2 பேர் துப்பாக்கியுடன் எழுந்து பஸ்சை நிறுத்தியுள்ளனர்.
தாங்கள் இருவரும் போலீஸ் என்று கூறியுள்ளனர். சிறிது நேரத்தில் 2 கார்களில் 8 பேர் வந்துள்ளனர். அவர்கள்அனைவரும் ராணுவத்தினரைப் போல் சீருடை அணிந்திருந்தனர். பஸ்சில் இருந்து வைர வியாபாரிகள், மீன்வியாபாரிகளை காருக்குள் ஏற்றி கடத்திச் சென்றுள்ளனர்.
வைர வியாபாரிகளான ரஷீத் மற்றும் ஷபீரிடம் இருந்து தலா ரூ.10 லட்சம் பணத்தையும், இதாரி என்ற மீன்வியாபாரியிடம் இருந்து ரூ.6 லட்சம் பணத்தையும் பிடுங்கியுள்ளனர். பிறகு நால்வரையும் வழியில் இறக்கி விட்டு,காரில் வந்தவர்கள் மைசூர் நோக்கிப் பறந்துள்ளனர்.
சாலையில் வந்த வாகனங்களில் ஒன்றை நிறுத்தி, பிடாடி காவல் நிலையம் சென்று புகார் கொடுத்துள்ளனர்.போலீஸார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கொள்ளையில் ஈடுபட்டது வீரப்பன் கும்பலாக இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இந்தரீதியிலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications