வீரப்பனை இப்போதைக்கு பிடிக்க முடியாது: விஜயக்குமார்
கோவை:
சந்தனக் கடத்தல் வீரப்பனை உடனடியாக பிடிக்கும் சூழ்நிலை தற்போது இல்லை என்று தமிழக அதிரடிப்படைதலைவர் விஜயக்குமார் கூறியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு பெங்களூரில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பேசிய கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா,வீரப்பன் இருப்பிடம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், 2 நாட்களில் அவன் பிடிபடுவான் என்றும்தெரிவித்திருந்தார்.
நேற்று கர்நாடக மாநிலம் குல்பர்காவில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில உள்துறை அமைச்சர்மல்லிகார்ஜூன கார்கேவும், தமிழக, கர்நாடக எல்லை வனப் பகுதியில் வீரப்பன் நடமாடுவதாகவும், அவன்பிடிபடுவான் என்றும் தெரிவித்திருந்தார்.
இது குறித்து இன்று கோவை வந்த விஜயக்குமாரிடம் கேட்டபோது, வீரப்பனைப் பிடிப்பதில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறோம். எங்களுடன், கர்நாடக அதிரடிப்படை போலீஸாரும் நன்கு ஒத்துழைத்து வருகிறார்கள்.
வீரப்பன் இருப்பிடம் குறித்து சரியாகத் தெரியவில்லை. அவன் முற்றுகையிடப் படவும் இல்லை. எனவே வீரப்பன்2 நாட்களில் பிடிபடும் சூழ்நிலையும் இல்லை.
வீரப்பனுக்கு சிலர் உதவி வருகிறார்கள். அவர்கள் யார் என்பதைக் கண்டுபிடித்து வருகிறோம். அவர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
வேட்டை செலவு ரூ. 7.50 கோடி
இதற்கிடையே சந்தனக் கடத்தல் வீரப்பன் வேட்டைக்காக 2004-04ம் ஆண்டு தமிழக அரசு ரூ. 7.50 கோடி பணத்தை செலவுசெய்துள்ளதாக சட்டசபையில் தெரிவிக்கப்பட்டது.
வீரப்பனைப் பிடிக்க நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிரடிப்படைக்கு கடந்த 2004-04ம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ. 5.66 கோடி பணம்ஒதுக்கப்பட்டது. ஆனால் திருத்த மதிப்பீட்டில் இது ரூ. 7.5 கோடியாக உயர்ந்தது.
வீரப்பன் குறித்த தகவல்களை சேகரிப்பது, உளவாளிகளுக்கு பணம் கொடுப்பது போன்ற ரகசிய சேவை செலவு ரூ. 42 லட்சமாகஇருந்தது.
2004-05ம் ஆண்டு பட்ஜெட்டில் வீரப்பன் வேட்டைக்காக ரூ. 7.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரகசிய சேவை செலவாகரூ. 23.50 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
