சட்டசபையில் ரூ.3159 கோடிக்கு துணை பட்ஜெட் இன்று தாக்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக சட்டசபையின் 10 நாள் கூட்டத் தொடர் இன்றுடன் முடிவடைந்தது. மூன்றாவது நாளாக எதிர்க்கட்சிகள்இன்றும் அவையைப் புறக்கணித்தன.

கலாம் திருப்பியனுப்பிய மசோதா தமிழக சட்டசபையில் இன்று விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்திய தண்டனைச்சட்டம் 167 (2) பிரிவுப்படி வழக்குகளில் கைதானவர்களை ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒருமுறையும்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். இதை 30 நாட்களாக உயர்த்தி கடந்த 2002ம் ஆண்டில் தமிழகசட்டமன்றத்தில் அதிமுக அரசு சட்ட மசோதாவை நிறைவேற்றியது.

இந்த மசோதாவுக்கு ஒப்புதல் கோரி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதை ஜனாதிபதியின் ஒப்புதலுக்குஆளுநர் அனுப்பி வைத்தார். ஆனால், இதற்கு ஒப்புதல் தர ஜனாதிபதி அப்துல் கலாம் மறுத்துவிட்டார்.இதையடுத்து ஆளுநர் மூலமாகவே இந்த மசோதா சபாநாயகர் காளிமுத்துவுக்கு திரும்ப வந்துவிட்டது.

இந்த சட்ட மசோதாவை மறுபரிசீலனை செய்யுமாறு கலாம் கருத்துத் தெரிவித்துள்ளதாக ஆளுநர் தனது குறிப்பில்கூறியிருந்தார். இன்று அந்தச் சட்ட மசோதாவை விலக்கிக் கொள்ள முடிவு செய்யப்பட்டது.

சட்டசபையில் இன்று நிதியமைச்சர் பொன்னையன் துணை 3159.72 கோடிக்கு துணைப் பட்ஜெட்டைத் தாக்கல்செய்தார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

  • சென்னை குடிநீர்ப் பிரச்சனையைத் தீர்க்க ரூ.150 கோடி கூடுதலாக ஒதுக்கப்படுகிறது.
  • அத்தியாவசியப் பொருட்களை வாங்க தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்துக்கு ரூ.200 கோடி ஒதுக்கப்படுகிறது.
  • 37 லட்சம் வேஷ்டிகள், 30 லட்சம் பாலிகாட்டன் சேலைகள் வாங்க ரூ.53 கோடி ஒதுக்கப்படுகிறது.
  • கூட்டுறவு வங்கிகளிடமிருந்து சிறு மற்றும் குறு விவசாயிகள் வாங்கிய பயிர் கடனுக்கான வட்டியைத் தள்ளுபடி செய்ய ரூ.41 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • மாநில குடிநீர் பணிகளை மேற்கொள்வதற்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துக்கு முன்பணமாக ரூ.100 கோடி வழங்கப்படும்.
  • 5860 கிலோமீட்டர் நீளத்துக்கு ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளை பராமரிக்க ரூ.300 கோடி மதிப்பில் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இதற்கு நடப்பு நிதியாண்டில் ரூ.125 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பின்னர், மறுதேதி குறிப்பிடப்படாமல் சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது. Mail this to a friend  Post your feedback  Print this page 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+