ஜெ.-வெங்கையா சந்திப்பு: புதுக்கோட்டை பா.ஜ.கவுக்குக் கிடைக்குமா?
சென்னை:
பா.ஜ.க. தலைவர் வெங்கைய்யா நாயுடு முதல்வர் ஜெயலலிதாவை இன்று சந்தித்து தொகுதி உடன்பாடு குறித்துபேச்சுவார்த்தை நடத்துகிறார்.
அதிமுகவுடன் கடைசி நேரத்தில் கூட்டணி சேர்ந்துள்ள பா.ஜ.க. நாடாளுமன்றத் தேர்தலில் 10 தொகுதிகளைகேட்டு வருகிறது. ஆனால் 6க்கு மேல் ஒரு தொகுதி கூட கிடையாது என்று முதல்வர் ஜெயலலிதா கறாராக கூறிவருகிறார்.
அதிலும், ஜெயலலிதாவின் பரம விரோதியான மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் எம்.பியாக இருந்தபுதுக்கோட்டை தொகுதியைக் கட்டாயம் தர முடியாது என்று அதிமுக தரப்பு கூறி விட்டது. இதனால் திருநாவுக்கரசர்கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
புதுக்கோட்டைத் தொகுதிக்காக பா.ஜ.க. தலைவர்கள் முட்டி மோதிக் கொண்டுள்ள நிலையில், அதிருப்தியில் உள்ளதிருநாவுக்கரசரை அத்வானி, வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் சமாதானப்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந் நிலையில் நேற்று இரவு வெங்கையா நாயுடு சென்னை வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்அவர் பேசுகையில், புதுக்கோட்டை தொகுதி குறித்து இப்போதைக்கு கேட்க வேண்டாம். அது தொடர்பாகஅதிமுகவுடன் பேச்சு நடத்தி வருகிறோம். உரிய முடிவு எடுக்கப்பட்டு உங்களுக்குத் தெரிவிக்கப்படும் என்றார்.
விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர், தமிழக பா.ஜ.க. தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்ஆகியோர் வெங்கையாவை வரவேற்றனர். திருநாவுக்கரசருடன், விமான நிலையத்திலேயே வெங்கையா நாயுடுசிறிது நேரம் ஆலோசனை நடத்தினார்.
இன்று ஜெயலலிதாவை வெங்கைய்யா நாயுடு சந்திக்கிறார். அப்போது தொகுதி உடன்பாடு குறித்து பேசப்படும்என்றும், புதுக்கோட்டை தொகுதி குறித்து ஜெயலலிதாவிடம் வெங்கைய்யா நாயுடு வலியுறுத்துவார் என்றும்பா.ஜ.க. தரப்பில் கூறப்படுகிறது.
-
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்!












Click it and Unblock the Notifications