மாணவர்களை அரசு பஸ்சில் ஏற்றாவிட்டால் நடவடிக்கை: அமைச்சர்
சென்னை:
அரசு பேருந்துகளில் மாணவ, மாணவிகளை ஏற்ற மறுத்தால், பேருந்தின் நடத்துநர் மற்றும் ஓட்டுநர் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் இது தொடர்பாக அதிமுகவைச் சேர்ந்த பால்மனோஜ் பாண்டியன், தென்னரசு, துணை சபாநாயகர்வரகூர் அருணாச்சலம் ஆகியோர், காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளிக்குச் செல்லும், பள்ளி விட்டு வீடுதிரும்பும் மாணவ, மாணவிகளை, அரசு பேருந்துகளில் ஏற்ற ஓட்டுநர்களும், நடத்துநர்களும் மறுக்கிறார்கள்.இதற்கு அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் விஸ்வநாதன், பள்ளிகளுக்கு அருகே உள்ள பேருந்து நிறுத்தங்களில் அனைத்துப்பேருந்துகளும் நின்று செல்ல வேண்டும், மாணவ, மாணவிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என்று ஏற்கனவே அரசுபேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாணவ, மாணவிகளை பேருந்துகளில் ஏற்ற மறுப்பது தவறு. அந்தத் தவறை செய்யும் ஓட்டுநர், நடத்துநர் மீதுகடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மாணவர்கள் தங்களது இலவச பாஸைத் தொலைத்து விட்டால் அவர்களுக்கு நகல் (டூப்ளிகேட்) பாஸ் வழங்குவதுகுறித்து அரசு பரிசீலிக்கும்.
பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள், டியூஷன் போன்றவை முடிந்து இரவில் வீடு திரும்பும் மாணவர்களுக்கு வசதியாகஇலவச பேருந்து பயணத்திற்கு அனுமதிப்பது குறித்தும் அரசு பரிசீலிக்கும். தற்போது பள்ளி நேரம் அல்லாத,விடுமுறை நாட்களில், இரவு நேரங்களில் இலவச பாஸ் மூலம் மாணவர்கள் அரசு பேருந்துகளில் பயணம் செய்யமுடியாது.
60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு பேருந்துகளில் இலவச பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றகோரிக்கையை அரசு ஏற்க இயலாத நிலையில் உள்ளது. அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் ஆண்டுக்கு ரூ. 408கோடி நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. எனவே இந்தக் கோரிக்கையை ஏற்க இயலாது என்றார் அமைச்சர்விஸ்வநாதன்.
-
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications