திமுக மாநாட்டை எதிர்த்த மனு தள்ளுபடி: மனுதாரருக்கு அபராதம்
சென்னை:
விருதுநகரில் நடைபெறவுள்ள திமுக மாநாட்டைத் தடை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நலன்மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அத்தோடு, தேவையில்லாமல் இந்த மனுவைத் தாக்கல்செய்த மனுதாரருக்கு ரூ. 3000 அபராதம் விதித்தது.
விருதுநகரில் திமுக தென் மண்டல மாநாடு நடைபெறவுள்ளது. இந் நிலையில் மாநாட்டைத் தடை செய்யக் கோரிசிவகாசியைச் சேர்ந்த செண்பகமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நலன் மனுவைத் தாக்கல்செய்தார்.
அந்த மனுவை பரிசீலித்த நீதிபதிகள் சிர்புர்கர் மற்றும் இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர், மனுதாரருக்கு கடும்கண்டனம் தெரிவித்தனர். எந்தவித அடிப்படையும் இல்லாமல் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்துவதற்கு திட்டமிட்ட விதிமுறைகள் உள்ளன. மாநாடு நடத்துவோர் அதற்கானஅனுமதியை உரிய காவல்துறை அதிகாரிகளிடம் வாங்கி விட்டுத்தான் நடத்துவார்கள்.
அது குறித்து ஆட்சேபம் இருந்தால், உரிய அதிகாரிகளை அணுகி அதை தெரிவிப்பதுதான் முறை. அதை விடுத்துபொது நலன் மனுவைத் தாக்கல் செய்வது தவறானது. இந்த மனுவில் முகாந்திரமே இல்லை என்பதால் இதைதள்ளுபடி செய்வதோடு, தேவையில்லாமல் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்காக ரூ. 3000 அபராதமும்விதிக்கப்படுகிறது என்று தெரிவித்தனர்.
-
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications