சன் டிவி கலாநிதி மாறனுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி:
திமுக தலைவர் கருணாநிதி கைது சம்பவத்தை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பியது தொடர்பாக தமிழக அரசுதொடர்ந்திருந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு சன் டிவி உரிமையாளர் கலாநிதி மாறனுக்கு உச்ச நீதிமன்றம் இன்றுநோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த 2001, ஜூன் 30ம் தேதி கருணாநிதி மற்றும் மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறன் கைதுசெய்யப்பட்டதை சன் டி.வியில் ஒளிபரப்பியது தொடர்பாக சென்னை செஷன்சு நீதிமன்றத்தில் தமிழக அரசுகலாநிதி மாறன் மீது வழக்குத் தொடர்ந்தது.
அந்த வழக்கில், பொதுமக்களுக்கு காவல் துறையின் மீதும், தமிழக அரசு மீதும் துவேஷம் ஏற்படும் வகையில்டப்பிங் செய்யப்பட்ட குரலுடன், தவறான முறையில் படக்கோர்வை செய்யப்பட்ட காட்சிகளுடன் கருணாநிதி கைதுஒளிபரப்பப்பட்டது என்று கலாநிதி மாறன் மீது குற்றம் சாட்டப்பட்டது.
அதை விசாரித்த நீதிமன்றம் கலாநிதி மாறனுக்கு சம்மன் அனுப்பியது. சர்ச்சைக்குரிய வீடியோ நீதிமன்றத்தில்தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து கலாநிதி மாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்செய்தார். அதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் 28-07-2004 ல் சம்மன் உத்தரவை ரத்து செய்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அந்த மனு மீதான விசாரணைஇன்று விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த நீதிபதி சந்தோஷ் ஹெக்டே மற்றும் நீதிபதி பி.பி.சிங் ஆகியோர்அடங்கிய பெஞ்ச், இது குறித்து தனது பதிலைத் தெரிவிக்குமாறு கலாநிதி மாறனுக்கு நோட்டீஸ் அனுப்பஉத்தரவிட்டது.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ












Click it and Unblock the Notifications