சோனியா கருணாநிதியை சந்தித்தார்: புதுவை பிரச்சனை தீரவில்லை
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று சந்தித்துப் பேசினார்.பேச்சுவார்த்தையில் பாண்டிச்சேரி தொகுதி குறித்து எந்தவித தீர்வும் எட்டப்படவில்லை.
திமுக தலைமையகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் இச் சந்திப்பு நடைபெற்றது. அண்ணா அறிவாலயவளாகத்தில் உள்ள கலைஞர் அரங்க நுழைவாயிலில் திமுக துணைப் பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலின், முன்னாள்மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு ஆகியோர் சோனியாவை வரவேற்று உள்ளே அழைத்துச்சென்றனர். பின்னர்கருணாநிதி உள்ளிட்டோர் சோனியாவை வரவேற்றனர்.
கருணாநிதிக்கு சோனியா காந்தி சால்வை அணிவித்தார். சோனியாவுக்கு கருணாநிதி பொன்னாடை அணிவித்தார்.பின்னர் சோனியாவுக்கு தேநீர் விருந்து அளித்தார். அப்போது மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து இருவரும்விவாதித்தனர்.
சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய சோனியா காந்தி,
கருணாநிதியுடனான சந்திப்பு மகிழ்ச்சியைத் தருகிறது. அதிமுக-பா.ஜ.க கூட்டணியை தோற்கடிக்கக் கூடியகூட்டணியாக எங்கள் கூட்டணி உள்ளது.
ஜெயின் கமிஷன் இறுதியறிக்கையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக்கும், திமுகவுக்கும் எந்தவிததொடர்பும் இல்லை என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஜெயின் கமிஷன் இடைநிலை அறிக்கையில்கூறப்பட்டிருந்த சில கருத்துக்களால் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது உண்மைதான்.
நான் வேற்று நாட்டைச் சேர்ந்தவர் என்று முதல்வர் ஜெயலலிதா கூறி வருகிறார். என்னுடைய மனசாட்சிப்படி நான்இந்தியப் பெண்ணாகத்தான் வாழ்கிறேன். இது குறித்து மற்றவர்கள் கூறுவதை என்னுடைய மனதில் இருந்துதுடைத்து விடுகிறேன்.
பாண்டிச்சேரி தொகுதி குறித்து இன்னும் ஓரிரு நாட்களில் உடன்பாடு எட்டப்படும். நாகர்கோவில் மற்றும்ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகள் பற்றிய பிரச்சனைகளை எங்கள் கட்சி பொதுச் செயலாளர் கமல்நாத்தே தீர்த்துவிடுவார் என்று கூறினார். இந்தச் சந்திப்பின்போது கமல்நாத் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் பிரணாப் முகர்ஜிஆகியோரும் உடனிருந்தனர்.
சோனியா காந்தியின் சென்னை வருகையையொட்டி சென்னை நகரில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்செய்யப்பட்டிருந்தன. இன்று இரவே சோனியா காந்தி டெல்லி திரும்புகிறார்.
-
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications