மதவாத சக்திகளை புறக்கணியுங்கள்: சென்னையில் சோனியா பேச்சு
சென்னை:
சென்னை காமராஜர் அரங்கத்தில் காமராஜர் சிலையை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று திறந்துவைத்தார்.
இன்று மதியம் சென்னை வந்த அவருக்கு விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் சார்பில் சிறப்பான வரவேற்புஅளிக்கப்பட்டது. அவரை அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கமல்நாத், தமிழக காங்கிரஸ் தலைவர்வாசன், முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன், சட்டசபை காங்கிரஸ் தலைவர்எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் ஆகியோரும் திமுக தரப்பில் தயாநிதி மாறன், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுஆகியோரும் வரவேற்றனர்.
விமான நிலையத்தில் இருந்து, தேனாம்பேட்டை காமராஜர் அரங்த்திற்குச் சென்றார். பிற்பகல் 2.00 மணிக்குகாமராஜர் சிலையைத் திறந்து வைத்தார். பின்னர் காமராஜ் அரங்கத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டுபேசினார்.
அக்கூட்டத்தில் புதுவை முதல்வர் ரங்கசாமி, இளங்கோவன், தங்கபாலு, குமரி அனந்தன், சோ.பாலகிருஷ்ணன்,திண்டிவனம் ராமமூர்த்தி, தனுஷ்கோடி ஆதித்தன், பிரபு, மணிசங்கர் அய்யர், சுதர்சன நாச்சியப்பன், புதுவைகண்ணன் உள்ளிட்ட முக்கிய காங்கிரஸ் தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் சோனியா பேசும்போது, வரும் தேர்தல் வரலாற்று முக்கியவத்துவம் வாய்ந்தது. மதவாத சக்திகளிடம்இருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது. மகாத்மா காந்தி பிறந்த நாட்டில் இத்தகையமதவாத சக்திகளை தமிழக மக்கள் முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்.
பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அரசு காவிரிப் பிரச்சனைக்குத் தீர்வு காணத் தவறிவிட்டது. இதனால் காவிரிடெல்டா இன்று பாலைவனமாகியுள்ளது. வரும் மக்களவைத் தேர்தலுக்குப்பின் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிஅமைந்தால், இரு மாநில விவசாயிகளுக்கும் பாதகம் ஏற்படாத வகையில், இப் பிரச்சனைக்குத் தீர்வு காண்போம்என்றார். பின்னர் அருகில் உள்ள காங்கிரஸ் மைதானத்தில் அமைந்துள்ள மறைந்த மூப்பனாரின் நினைவிடத்திற்குச்சென்று மலர் அஞ்சலி செலுத்தினார்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications