இப்போதைக்கு அரசியல் கிடையாது: விஜயகாந்த் "பல்டி"
திருச்சி:
உடனடியாக அரசியலில் குதிக்கும் எண்ணம் இல்லை, ரசிகர்களுடன் விரிவான ஆலோசனை நடத்திய பிறகே அதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என்று நடிகர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த்தும், விஜயகாந்த்தும் எப்போது அரசியலுக்கு வருவார்கள் என்று தமிழக மக்கள் "ஆர்வத்துடன்"காத்துக் கொண்டுள்ளனர். அதற்கேற்ப விஜயகாந்த் அடிக்கடி, தான் அரசியலில் குதிக்கப் போவதாகக் கூறிவருகிறார்.
இந் நிலையில் நேற்று திருச்சியில் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தான் தனிக்கட்சி தொடங்கப்போவதாகவும், ஜாதி, மத பேதமற்ற வகையில் அது இருக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
சென்னை நகரில் பல இடங்களில்விஜயகாந்த் ரசிகர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.
ஆனால் விஜயகாந்த் நேற்று இரவு செய்தியாளர்களைச் சந்தித்து இப்போதைக்கு உடனடியாக அரசியலில் குதிக்கும்எண்ணம் இல்லை என்று தெரிவித்து ரசிகர்களின் ஆசையை புஸ்வானமாக்கி விட்டார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், உடனடியாக அரசியலில் குதிக்கும் எண்ணம் என்னிடம் இல்லை.
எனது ரசிகர்களுடன் விரிவாகப் பேசி, பல்வேறு ஆய்வுகள் நடத்தி அதன் பிறகே ஒரு முடிவுக்கு வருவேன்.
எனது ரசிகர்கள் என்னை தீவிர அரசியலில் ஈடுபடுமாறு நீண்ட காலமாகவே அழைத்து வருகிறார்கள். இருப்பினும்இப்போதைக்கு அரசியலில் நுழையும் எண்ணம் இல்லை. அந்த முடிவை எடுக்க எனக்கு நிறைய கால அவகாசம்தேவைப்படுகிறது.
அதேசமயம், தேவைப்பட்டால், அப்படிப்பட்ட நிலைமை உருவானால் கட்சி ஆரம்பித்து அரசியலில் தீவிரமாகஈடுபடவும் நான் தயங்க மாட்டேன் என்று கூறினார் விஜயகாந்த்.
எனவே, தொடர்ந்து குழப்பத்திலேயே தனது ரசிகர்களை வைத்திருக்க விஜயகாந்த் முடிவு செய்துள்ளார் என்பதுமட்டும் தற்போதைக்கு தெளிவாகியுள்ளது.
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications