கிரிக்கெட் அணி பாக். செல்ல மத்திய அரசு அனுமதி
டெல்லி:
இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் நாட்டில் சுற்றுப் பயணம் செல்ல மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ஐசிசி திட்டப்படி, அடுத்த மாதம் பாகிஸ்தான் நாட்டில் இந்திய அணி சுற்றுப்பிரயாணம் செய்ய வேண்டும். ஆனால், இந்தியஅணியின் கேப்டன் செளரவ் கங்குலி, பாகிஸ்தானில் பாதுகாப்பு குறித்து அச்சம் தெரிவித்திருந்தார்.
இந் நிலையில், இது தொடர்பாக பிரதமர் வாஜ்பாய், துணைப் பிரதமர் அத்வானி, மத்திய நிதியமைச்சர் ஜஸ்வந்த் சிங், மத்தியவெளியுறவுத் துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் இன்று காலை ஆலோசனை நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த யஷ்வந்த் சின்ஹா, இந்திய அணி பாகிஸ்தான் செல்வது தொடர்பான அனைத்துவிஷயங்களையும் அலசி ஆராய்ந்தோம். ஆலோசனை முடிவில், இந்திய அணி திட்டமிட்டபடி பாகிஸ்தான் செல்வது என முடிவுசெய்யப்பட்டது.
விளையாட்டு தேதிகளை இந்திய கிரிக்கெட் வாரியமும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் கலந்து பேசி முடிவு செய்யும் என்றார்.
மக்களவைத் தேர்தல் வரும் சமயத்தில், இந்திய அணிக்கு பாகிஸ்தானில் ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தாலோ, தோல்விகள்ஏற்பட்டாலோ அது பா.ஜ.கவின் தேர்தல் வெற்றியைப் பாதிக்கும் என்று மத்திய கருதியது. எனவே, தேர்தலுக்குப் பிறகுபாகிஸ்தான் செல்லலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்தது.
ஆனால், பாகிஸ்தானில் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பார்வையிட்ட இந்திய கிரிக்கெட் வாரியக் குழு பிரச்சனை ஏதுமில்லை,பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்திகரமாக இருப்பதாகக் கூறிவிட்டது. இதையடுத்து வேறு வழியில்லாமல் மத்திய அரசும் அனுமதிவழங்கியுள்ளது.
இந்திய அரசின் முடிவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் சஹார்யர் கான் வரவேற்றுள்ளார்.
-
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications