அதிமுகவுடன் தொகுதி உடன்பாடு இறுதியாகவில்லை: பா.ஜ.க
சென்னை:
பா.ஜ.க.-அதிமுக இடையே தொகுதிப் பங்கீடு இன்னும் இறுதியாகவில்லை என மத்திய சட்டத்துறை அமைச்சர் அருண்ஜேட்லியும், பாதுகாப்பு அமைச்சரும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான ஜார்ஜ் பெர்னாண்டசும்தெரிவித்துளளனர்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜேட்லி, அதிமுகவுடனான பேச்சுவார்த்தை தேசிய அளவிலும்மாநில அளவிலும் நடந்து வருகிறது. தேர்தலுக்கு நிறைய நேரம் இருப்பதால் நாங்கள் இதில் அவசரம் காட்டவில்லை,பேச்சுவார்த்தை தொடர்ந்து கொண்டுள்ளது என்றார்.
சென்னை வந்த அவர் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கவில்லை. பா.ஜ.கவிடம் டெல்லி, மும்பை, கர்நாடகத்தில் ஜெயலலிதாதலா ஒரு சீட் கேட்பதாக தகவல்கள் வரும் நிலையில் தேசிய அளவிலும் அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றுஜேட்லி கூறியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
பெர்னாண்டஸ் பேட்டி:
அதே போல அந்தமானில் இருந்து டெல்லி திரும்பும் வழியில் இன்று சென்னை விமான நிலையத்தில் நிருபர்களைச் சந்தித்தார்பெர்னாண்ட. அவரிடம், வைகோவை மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இழுக்கவே அவரை சந்தித்தீர்களா என்றுகேட்டபோது, அதற்கு நேரடியாக பதில் தராத பெர்னாண்டஸ், வைகோ சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். அதனால்சந்தித்தேன் என்றார்.
மேலும், சிறையில் இருந்தபோது வைகோவை மூன்று முறை சந்தித்துள்ளேன். அவரது உடல் நிலை குறித்து பல மாதிரியானசெய்திகள் வந்தன. இதனால் சந்தித்து நலம் விசாரித்தேன். அவர் பூரண நலமாக இருப்பது மகிழ்ச்சி தருகிறது.
அதிமுகவுடன் தொகுதி உடன்பாடு இறுதியாகவில்லை. தேர்தலுக்குத் தான் இன்னும் நாள் உள்ளதே. இந்த விஷயத்தில் பேச்சுநடத்தவும் கூட நான் தயார் தான் என்றார்.
பேச்சுவார்த்தைகளில் நானும் ஈடுபடத் தயார் என்று பெர்னாண்டஸ் கூறியிருப்பது, இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகளில் சிக்கல்இருப்பதையே காட்டுகிறது.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications