பா.ஜ.க. வேட்பாளர்கள் பெயரையும் பரிந்துரைக்கும் அதிமுக!
சென்னை:
அதிமுகவுடனான தொகுதி உடன்பாட்டு இழுபறி குறித்து இன்று பா.ஜ.கவின் ஆட்சி மன்றக் குழு விவாதிக்கிறது.
பா.ஜ.கவுக்கு 6 தொகுதிகள் என்று கூறிவந்த முதல்வர் ஜெயலலிதா இப்போது கொஞ்சம் இறங்கி வந்து 7 தொகுதிகள் கொடுக்கசம்மதித்துள்ளார். ஆனால், திருநாவுக்கரசரின் புதுக்கோட்டை தொகுதியை தர முடியாது என்று கூறிவிட்டார்.
தான் கொடுக்கும் 7 தொகுதிகளிலும் யார், யாரை நிறுத்த வேண்டும் என்று ஒரு பட்டியலையும் பா.ஜ.கவிடம் அதிமுகதந்துள்ளதாகத் தெரிகிறது.
தென் சென்னையில் சுகுமாறன் நம்பியாரை நிறுத்த வேண்டும், திருச்சியில் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் தங்கை லலிதாவைநிறுத்த வேண்டும், சிவகங்கை அல்லது ராமநாதபுரத்தில் எச்.ராஜாவை நிறுத்த வேண்டும் நீலகிரியில் மாஸ்டர் மாதனை (கடந்தமுறை பா.ஜ.க.வில் நின்று வென்றவர்) நிறுத்தக் கூடாது, இல.கணேசனை எந்த இடத்திலும் நிறுத்தக் கூடாது என தொகுதிகளோடுசேர்த்து வேட்பாளர்களின் பெயர்களையும் அதிமுகவே பரிந்துரைப்பதால் பா.ஜ.க. மண்டையைப் பிய்த்துக் கொண்டுள்ளது.
ஏற்கனேவ டெல்லி, மும்பை, கர்நாடகத்தில் தலா ஒரு தொகுதியாவது தர வேண்டும் என்ற நிபந்தனையையும் அதிமுக விதித்தது.இதனால் தமிழக பா.ஜ.கவினர் மத்தியில் பெரும் சோகம் பரவியுள்ளது.
அதே நேரத்தில் புதுவையை பா.ஜ.கவுக்கு ஒதுக்கவும் அதிமுக முன் வந்துள்ளது.
இதற்கிடையே, வாரத்துக்கு இரண்டு முறையாவது துடுக்குத்தனமான பேட்டிகள் தரும் பா.ஜ.கவின் இல.கணேசன், எச்.ராஜா,ராதாகிருஷ்ணன் ஆகியோர் கடந்த சில வாரங்களாக எந்தவிதமான பேட்டிகளும் தராமல் வாய்மூடி மெளனிகளாகமாறிவிட்டனர். நிருபர்கள் சந்திப்பையும் இவர்கள் தவிர்த்து வருகின்றனர்.
அதிமுகவுடனான கூட்டணி குறித்து கேள்விகள் வந்தால் பதில் சொல்ல முடியாது என்பதால் ரொம்பவே அடக்கி வாசிக்கஆரம்பித்துள்ளனர். பேட்டிகள் மூலம் அதிமுகவுக்கு எந்தவிதமான சங்கடத்தையும் தந்துவிடக் கூடாது என்று மத்திய பா.ஜ.க.தலைமை இவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.
புதுக்கோட்டை வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கும் திருநாவுக்கரசரின் ஆதரவாளர்களும், சில பா.ஜ.கவினரும் தனித்துப்போட்டியிடலாம் என்ற யோசனையையும் முன் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே இன்று பிரதமர் வாஜ்பாயின் இல்லத்தில் பா.ஜ.க. ஆட்சி மன்றக் குழு கூடுகிறது. இதில், அதிமுகவுடனானபிரச்சனை உள்பட தேசிய அளவிலான கூட்டணிகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
ஜெ. காத்திருக்கப் போவதில்லை:
இதற்கிடையே வரும் வெள்ளிக்கிழமை அமாவாசை என்பதால் அன்றைய தினமோ அல்லது அதையடுத்த சில தினங்களிலோஜெயலலிதா தனது பிரச்சாரத்தை ஆரம்பித்துவிடுவார் என்றும், திமுக தென் மண்டல மாநாட்டுக்கு முன்னதாகவே வேட்பாளர்கள்பட்டியலைக் கூட வெளியிட்டுவிடும் என்றும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதற்குள் பா.ஜ.க. நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டு தொகுதி உடன்பாடு செய்யாவிட்டால் அனைத்துத் தொகுதிகளுக்கும்அதிமுக வேட்பாளர்களை ஜெயலலிதா அறிவித்துவிடுவார் என்றும் தெரிகிறது.
செங்கோட்டையனுக்கு மறுவாழ்வு:
இதற்கிடேயே தேர்தல் ஸ்பெஷலிஸ்ட்டான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு முக்கிய பதவி வழங்கியுள்ளார்ஜெயலலிதா.
தொகுதிகளில் ஜெயலலிதாவின் சுற்றுப் பயணத்தை வகுப்பது, பிரச்சார வியூகம் வகுப்பது, தேர்தல் வேலைகள், செலவுகள்செய்வதில் கில்லாடி என பெயர் பெற்றவர் செங்கோட்டையன். பல ஆண்டு காலமாக ஜெயலலிதாவின் பிரச்சார யுத்திகளைவகுத்து வந்தவர் இவர் தான்.
சமீபகாலமாக இவர் ஓரங்கட்டப்பட்டிருந்தார். இந் நிலையில் அவரை கட்சியின் அமைப்புச் செயலாளராக நியமித்து ஜெயலலிதாஉத்தரவு பிறப்பித்துள்ளார். அவருக்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications