நாகர்கோவிலில் தனித்துப் போட்டி!
நாகர்கோவில்:
நாகர்கோவில் தொகுதி காங்கிரஸுக்கு வழங்கப்படாவிட்டால், தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என்றுஅப்பகுதி காங்கிரஸார் திடீரென்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
புதுவை தொகுதியை பா.ம.கவுக்கு ஒதுக்கியதால் புதுவை காங்கிரஸார் கடும் அதிருப்தியில் உள்ளனர்.அதேபோல,ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட ஸ்ரீபெரும்புதூர், பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் தொகுதியான நாகர்கோவில்ஆகிய தொகுதிகளை காங்கிரஸுக்கு ஒதுக்காததால், தமிழக காங்கிரஸும் அதிருப்தியில் உள்ளது.
நாகர்கோவில் தொகுதியில் காமராஜர் வெற்றி பெற்ற பெருமை இருப்பதால் அதை காங்கிரஸுக்கே ஒதுக்கவேண்டும் என்று அப்பகுதி காங்கிரஸார் மாநில காங்கிரஸ் தலைமை மற்றும் தேசியத் தலைமைக்கு கோரிக்கைவிடுத்து வருகின்றனர்.
ஆனால் இதுவரை நாகர்கேவில் குறித்து காங்கிரஸ் தலைவர்கள் உறுதியான பதிலைத் தெரிவிக்காததால்நாகர்கோவில் பகுதி காங்கிரஸார் ஒரு முடிவுக்கு வந்து விட்டனர். நாகர்கோவில் தொகுதியை காங்கிரஸுக்குஒதுக்காவிட்டால் தனித்துப் போட்டியிடுவோம். காங்கிரஸ் சின்னம் கிடைக்காவிட்டால் சுயேச்சை சின்னத்தில்நின்று போட்டியிட்டு எங்களது பலத்தை நிரூபிப்போம் என்று நாகர்கோவில் பகுதி காங்கிரஸ் தலைவர்கள்தெரிவித்துள்ளனர்.
வருகிற 17ம் தேதி மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் காங்கிரஸாரின் கூட்டம் நாகர்கோவிலில்நடைபெறவுள்ளது. அப்போது இது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப் போவதாக அவர்கள் பகிரங்கமாகஅறிவித்துள்ளனர்.
முன்னாள் எம்.பி. டென்னிஸ், முன்னாள் எம்.எல்.ஏ.மோசஸ், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்ஜெயபால்,மேற்கு மாவட்ட தலைவர் பிரின்ஸ் என மாவட்ட காங்கிரஸ் தலைமையே கட்சிக்கு எதிராகக்கிளம்பியிருப்பதால் காங்கிரஸ் கட்சியே திவாலாகும் நிலைமை இங்கு ஏற்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications