கர்நாடக சட்டசபை கலைப்பு
பெங்களூர்:
மக்களவைத் தேர்தலுடன் சட்டப் பேரவைத் தேர்தலையும் சந்திக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்துசட்டசபையை வரும் 23ம் தேதி கலைத்துவிடும்படி ஆளுநருக்கு அமைச்சரவை இன்று பரிந்துரை செய்தது.
கர்நாடக சட்டமன்றத்தின் ஆயுட்காலம் வரும் நவம்பர் மாதம் வரை உள்ளது. ஆனால், முதல்வர் கிருஷ்ணா தலைமையிலானகாங்கிரஸ் அரசு பெரும் பலத்துடன் உள்ளது. முக்கிய எதிர்க் கட்சியான ஜனதா தளம் சிதறுண்டு போயுள்ளது. அதே போலபா.ஜ.கவும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பலத்துடன் இல்லை.
மேலும் ஆட்சியில் இருக்கும் கிருஷ்ணாவுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருவதால் சட்டசபைத் தேர்தலையும்இப்போதே நடத்திவிட காங்கிரஸ் முடிவு செய்தது.
மாநில காங்கிரஸ் தலைவர் ஜனார்தன பூஜாரி தான் இந்த முடிவை எடுத்தார். இதை கிருஷ்ணா ஏற்க மறுத்து வந்தார். மீண்டும்வென்றாலும் தன்னை மீண்டும் முதல்வராக்க மாட்டார்கள் என்பதால் நவம்பர் வரை சட்டமன்றத்தைக் கலைக்க வேண்டியதில்லைஎன்று கூறி வந்தார்.
ஆனால், பெரும்பாலான அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் உடனடித் தேர்தல் நடத்தினால் மீண்டும் வென்றுவிடலாம் என்றுகருத்து தெரிவித்ததால் பூஜாரியின் கோரிக்கையை ஏற்று சட்டமன்றத்தைக் கலைக்க சோனியா காந்தி உத்தரவிட்டார்.
கடந்த நாலரை ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் கிருஷ்ணா கர்நாடகத்தை பெரும் வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு சென்றார்என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், மீண்டும் காங்கிரஸ் வென்றாலும் அவரை முதல்வராக்க மற்ற தலைவர்கள் விட மாட்டார்கள்என்பது குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ணா ஒக்கலிகா சமூகத்தைச் சேர்ந்தவர், மீண்டும் அதே சமூகத்தைச் சேர்ந்தவரே முதல்வராவதா என்று அடுத்த முக்கியசமூகமான லிங்காயத்து மற்றும் பிற பிற்பட்ட இன தலைவர்கள் ஆட்சேபம் தெரிவிப்பார்கள் என்பதால் அவருக்கு பதவி மீண்டும்கிடைப்பது கடினமே.
-
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications