தமிழக எல்லையை அடைந்தது கிருஷ்ணா நதி நீர்: சென்னையில் வினியோகிக்க 15 நாட்களாகும்
சென்னை:
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணைக்கட்டில் இருந்து சென்னை நகருக்குத் திறந்துவிடப்பட்ட கிருஷ்ணா நதி நீர் தமிழகஎல்லையை அடைந்துள்ளது.
கண்டலேறு அணையில் தண்ணீர் மட்டம் மிகக் குறைவாக உள்ளதால் மதகுகளைத் (gates) திறந்தாலும் அதன் வழியாக தண்ணீர்வெளியேரவில்லை. இதனால் மோட்டார் பம்புகள் வைத்து தண்ணீர் அணையிலிருந்து பம்ப் செய்யப்படுகிறது.
கடந்த மாதம் 13ம் தேதி முதல் இந்த நீர் பம்ப் செய்யப்பட்டு தமிழகத்துக்கு அனுப்பப்படுகிறது. வரும் வழியெல்லாம் இந்த நீரைஆந்திர மாநில விவசாயிகள் உறிஞ்சிவிட்டனர். பின்னர் கைலாசகிரி என்ற இடத்தில் இந்த நீர் திருப்பதிக்குத் திருப்பிவிடப்பட்டது.
திருப்பதி நகர தேவையைப் பூர்த்தி செய்தது போக மீத நீர் தமிழகத்துக்கு வந்து கொண்டுள்ளது. இதனால் கிட்டத்தட்ட ஒரு மாதம்முடிந்துவிட்ட நிலையில் இப்போது தான் இந்த நீர் 150 கி.மீ. தூரத்தைக் கடந்து தமிழக எல்லைப் பகுதியில் உள்ளஊத்துக்கோட்டை கால்வாயை இன்று காலை அடைந்துது.
பம்ப் செட்கள் மூலம் கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. ஆனால்,வழியெங்கும் உபயோகப்படுத்தப்பட்டது போக இன்று காலை தமிழக எல்லைக்கு வினாடிக்கு 15 கன அடி நீர் மட்டுமே வரஆரம்பித்துள்ளது.
இதையடுத்து வினாடிக்கு 1,000 கன அடி நீரையாவது வெளியேற்றினால் தான் சென்னைக்குக் குறைந்தபட்ச நீராவது கிடைக்கும்என தமிழக பொதுப் பணித்துறையினர் ஆந்திர பொதுப் பணித்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்று காலை தமிழகம் வந்த நீர் பூண்டி ஏரியை அடைய (25 கி.மீ. தொலைவில் உள்ளது) இன்னும் 12 நாட்களாவது ஆகும்.இதையடுத்து அந்த நீர் புழல் ஏரிக்குக் கொண்டு வரப்பட்டு அங்கு சுத்தம் செய்யப்பட்டு லாரிகள் மூலம் சென்னை நகருக்குள்வினியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் கிருஷ்ணா நீர் சென்னை மக்களுக்குக் கிடைக்க இன்னும் 2 வார காலத்துக்கும் மேலாகலாம்.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications