அதிமுகவின் நிபந்தனைகளை ஏற்க பா.ஜ.க. முடிவு: நாளை தொகுதிப் பங்கீடு
சென்னை:
பா.ஜ.கவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளின் பட்டியலை முதல்வர் ஜெயலலிதா நாளை அறிவிப்பார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
இன்று ஜெயலலிதாவை மத்திய நலத்துறை அமைச்சரும் மூத்த பா.ஜ.க. தலைவருமான சுஷ்மா சுவராஜ் போயஸ்கார்டனில் சந்தித்து இறுதிக் கட்ட பேச்சு நடத்தவுள்ளார்.
அதே நேரத்தில் புதுக்கோட்டை தொகுதி திருநாவுக்கரசருக்கு இல்லவே இல்லை என்று ஜெயலலிதாதிட்டவட்டமாக அறிவித்துவிட்டதால் அவரை மாநிலங்களவை எம்.பியாக்கிவிட நேற்று பிரதமர் வாஜ்பாய்தலைமையில் நடந்த பா.ஜ.க. ஆட்சி மன்றக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
மேலும், அதிமுக எந்தத் தொகுதிகளைத் தந்தாலும் அதை ஏற்றுக் கொண்டு கூட்டணிப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதுஎன்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுடன் பேசியே தங்களது வேட்பாளர்களை இறுதி செய்வது என்றமுடிவுக்கும் பா.ஜ.க. வந்துவிட்டது.
அதே நேரத்தில் மும்பை, டெல்லி, கர்நாடகத்தில் தலா ஒரு சீட் தர வேண்டும் என்ற அதிமுகவின் கோரிக்கைகுறித்து பின்னர் பேசலாம் என்றும், இப்போதைக்கு தமிழக கூட்டணியை இறுதி செய்யலாம் என்றும் அதிமுகவிடம்பா.ஜ.க. கூறியுள்ளது.
பா.ஜ.க. இந்த அளவுக்கு இறங்கி வந்துவிட்டதையடுத்து அக் கட்சிக்கான தொகுதிகளை ஜெயலலிதா நாளைஅல்லது மறுநாள் அறிவித்துவிடுவார் என்று கூறப்படுகிறது.
கடந்த முறை பா.ஜ.க. வென்ற நீலகிரியைத் திரும்ப அவர்களுக்கே தருவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.அத்தோடு கோவை, நாகர்கோவில், தென்சென்னை, சிவகங்கை, திருச்சி, பாண்டிச்சேரி ஆகிய தொகுதிகளும்தங்களுக்குத் தரப்படும் என பா.ஜ.க. வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.
புதுக்கோட்டை மட்டுமல்ல, தமிழகத்தில் வேறு எந்தத் தொகுதியிலும் திருநாவுக்கரசரை நிறுத்தக் கூடாது என்றுபா.ஜ.கவுக்கு ஜெயலலிதா நிபந்தனை விதித்தது குறித்து நேற்று பா.ஜ.க. தலைவர்கள் காரசாரமாக விவாதித்தனர்.
ஆனால், அதிமுக கூட்டணி இல்லாவிட்டால் நாகர்கோவில் தவிர தமிழகத்தில் வேறு எந்தத் தொகுதியிலும்பா.ஜ.கவுக்கு டெபாசிட் கூட கிடைக்காது என்பதை நாயுடு எடுத்துக் கூறியதையடுத்து அதிமுகவின் நிபந்தனைகள்அத்தனையையும் ஏற்பது என்ற முடிவை பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான கூட்டம் எடுத்தது.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications