இந்திய கம்யூ. வேட்பாளர்கள்: கோவை- சுப்பராயன், தென்காசி-அப்பாதுரை
சென்னை:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிடும் இரு வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கோயம்புத்தூரில் சுப்பராயனும், தென்காசி தொகுதியில் அப்பாதுரையும் போட்டியிடுவர் என அக் கட்சி இன்றுஅறிவித்தது.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய அக் கட்சியின் மாநில செயலாளர் நல்லகண்ணு இதனைத் தெரிவித்தார்.
சுப்பராயன் ஏற்கனவே திருப்பூர் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏவாக இருமுறை தேர்வு செய்யப்பட்டவராவார்.அப்பாதுரை, ஒட்டப்பிடாரம் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்துள்ளார். தற்போது இவர் தூத்துக்குடி மாவட்ட இந்தியகம்யூனிஸ்ட் செயலாளராக இருக்கிறார்.
நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது வேட்பாளர்களை அறிவித்தது. மதுரையில் இப்போதையேஎம்.பியான ப.மோகனும், நாகர்கோவிலில் பெல்லார்மினையும் அக் கட்சி நிறுத்தியுள்ளது.
தமிழகத்தில் முதலில் வேட்பாளர்களை அறிவித்ததுள்ளது கம்யூனிஸ்ட் கட்சிகள் தான்.
மிக எளிமையான வேட்பாளர்கள்:
மதுரை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிடும் மோகன் மகா எளிமைக்குப் பெயர்போன அரசியல்வாதி. எம்.பியாக இருந்தாலும் மதுரையில் இன்றும் தனது எம்-80 டூ வீலரில்தான் இன்றும் போய்வந்து கொண்டிருக்கிறார். தொகுதிப் பிரச்சனைக்காக இவரை எந்த நேரமும் வீட்டில் சென்று சந்திக்க முடியும்.
இத் தொகுதியில் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன் போட்டியிட விரும்பியதாக தகவல் வந்ததையடுத்து,அவருக்கு வாய்ப்பு தரும் வகையில் தான் மீண்டும் போட்டியிட விரும்பவில்லை என்று தலைமைக்கு செய்திஅனுப்பினார்.
ஆனால், அவருக்கு மதுரை மக்களிடையே உள்ள செல்வாக்கையும் மரியாதையையும் மனதில் வைத்துஅவரையே மீண்டும் நிற்கச் சொல்லிவிட்டார் வரதராஜன்.
நிருபர்களிடம் பேசிய மோகன், நான் மீண்டும் எம்.பியாக தேர்வு செய்யப்பட்டால், மதுரைக்கு மட்டுமல்லாதுதமிழகத்தின் வளர்ச்சிக்கே பெருமளவில் உதவும் வகையிலான சேது சமுத்திரம் திட்டத்தை முழுமையாகநிறைவேற்ற முயற்சி எடுப்பேன்.
மதுரை-மேலூர்-சிவகங்கை இடையே ரயில் பாதை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளேன்.மதுரையிலிருந்து தொண்டி வரையிலும் ரயில் பாதை அமைய வேண்டியதுஅவசியம்.ன்னைக்கும், கன்னியாகுமரிக்கும் இடையிலான ரயில் பாதையை இரட்டிப்பாக்கவும் நடவடிக்கைஎடுக்கவுள்ளேன். மதுரை-கோட்டயம் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றவும் முயற்சி செய்வேன்என்றார்.
அதே போல நாகர்கோவிலில் போட்டியிடப் போகும் பெல்லார்மீனும் அநியாயத்துக்கு எளிமையானவர். பழுத்ததொழிற்சங்கவாதியான இவர் தேர்தல் களம் காண்பது இதுவே முதல்முறை. தனது 20 வயதில் கம்யூனிஸசிந்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு மார்க்ஸீய இயக்கத்தில் சேர்ந்தவர்.
குமரி மாவட்டம் நெய்யூர் அருகே உள்ள மாங்குழி என்ற பகுதியைச் சேர்ந்தவர் இவர்.
30 ஆண்டுகளாக போராட்டங்களே வாழ்க்கையாகக் கொண்டவர். சொந்த நிலம் தவிர மற்ற வசதியெல்லாம்கிடையாது. பஸ்சிலும், ஆட்டோவிலும் தான் பயணம். அவர் கூறுகையில், நாகர்கோவில் தொகுதி எங்களுக்குத்தரப்பட்டதால் காங்கிரஸார் வருத்தத்தில் இருப்பது உணமை தான். ஆனாலும் இந்த அதிருப்தியால் எனது வெற்றிபாதிக்கப்படாது என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications