இலங்கை கிருஸ்துவ விவகாரத்துறை அமைச்சரும் நீக்கம்
கொழும்பு:
இலங்கை கிருஸ்துவ விவகாரத்துறை கேபினட் அமைச்சரை பதவியிலிருந்து அதிரடியாக நீக்கியுள்ளார் அதிபர்சந்திரிகா. இதற்கான உத்தரவு நேற்றிரவு வெளியிடப்பட்டது.
நாடாளுமன்றத்தைக் கலைத்த கையோடு, பிரதமர் ரணிலின் அமைச்சரவையில் இருந்த 39 துணைஅமைச்சர்களையும் நீக்கினார் சந்திரிகா. இந் நிலையில் கேபினட் அந்தஸ்தில் இருந்த கிருஸ்துவ விவகாரத்துறைஅமைச்சரான ஜான் அமரதுங்காவையும் நீக்கம் செய்துள்ளார்.
மேலும் ஜான் மற்றும் நீக்கப்பட்ட 39 துணை அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பையும் வாபஸ்பெற்றுள்ளார்.
முதலில் உள்துறை அமைச்சராக இருந்த ஜான், கடந்த நவம்பர் மாதம் கிருஸ்துவ விவகாரத்துறைக்குமாற்றப்பட்டபோது அவர் முறையாக என் முன் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவில்லை என்பதால் அவரைபதவி நீக்கம் செய்துள்ளதாக சந்திரிகா கூறியுள்ளார்.
இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் கிருஸ்துவ மத வழிபாட்டு மையங்கள் மீது தாக்குதல் நடப்பது அதிகரித்துவரும் நிலையில் சந்திரிகாவின் இந்தச் செயல் அச் சமூக மக்களிடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி












Click it and Unblock the Notifications