திமுகவில் சேருகிறார் ப.சிதம்பரம் கட்சி எம்.எல்.ஏ
சென்னை:
ப.சிதம்பரத்தின் காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை கட்சியின் எம்.எல்.ஏவான புரசைவாக்கம் ரங்கநாதன் திமுகவில்சேர முடிவு செய்துள்ளார். இதனால் சிதம்பரத்தின் கட்சி சட்டசபையில் பிரதிநிதித்துவம் இழக்கிறது.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறிய ப.சிதம்பரம் பின்னர் அமைத்த காங்கிரஸ் ஜனநாயகப்பேரவை கட்சியில் ரங்கநாதனும் இணைந்தார். ப.சிதம்பரத்திற்கு நெருக்கமானவராகத் திகழ்ந்த ரங்கநாதனுக்குகடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் சீட் தரப்பட்டது.
அவர் உதயசூரியன் சின்னத்தில் சென்னை புரசைவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
சமீப காலமாக ப.சிதம்பரத்திற்கும், புரசை ரங்கநாதனுக்கும் இடையே விரிசல் ஏற்படத் தொடங்கியது. சிலமாதங்களுக்கு முன் நிலத் தகராறு ஒன்றில் அடியாட்களுடன் சென்று சிலரை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில்புரசை ரங்கநாதன் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோயிருந்தார். முன் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதிகற்பகவிநாயகம், மக்கள் பிரதிநிதியான நீங்கள் இப்படிச் செய்யலாமா என்று கண்டித்ததோடு, மதுரை காந்திஅருங்காட்சியகத்தில் தினமும் காந்தியடிகளின் சத்தியசோதனையை படிக்க வேண்டும் என்று உத்தரவுபிறப்பித்தார்.
அதன் பின்னர் சென்னைக்கும் வந்து காந்தி நூல்களைப் படிக்க உத்தரவிடப்பட்டார். பின்னர் ஒரு வழியாகஅவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக புரசை ரங்கநாதனுக்கும், ப.சிதம்பரத்திற்கும்இடையே கருத்து வேறுபாடு எழுந்ததாகத் தெரிகிறது.
இதனால் திமுகவில் இணைந்து விட ரங்கநாதன் முடிவு செய்துள்ளார். வரும் 20ம் தேதி திமுக தலைவர் கருணாநிதிமுன்னிலையில் அவர் திமுகவில் இணையவுள்ளார்.
வரும் மக்களவைத் தேர்தலில் ப.சிதம்பரத்தின் கட்சிக்கு திமுக தனது கூட்டணியில் இடம் தரவில்லை. இதனால்திமுக மீது அவர் அதிருப்தியுடன் இருக்கும் நிலையில் அவரது கட்சி எம்.எல்.ஏவை திமுக இழுத்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.
-
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா!












Click it and Unblock the Notifications