வைகோ, கோபால் விஷயத்தில் இறுதி முடிவெடுக்க பொடா மறு ஆய்வு குழுவுக்கு தடை
டெல்லி:
வைகோ, கோபால் ஆகியோர் மீதான பொடா வழக்குகளை மறு ஆய்வு செய்து வரும் குழு, தனது இறுதித் தீர்ப்பைஅறிவிக்க உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நக்கீரன் ஆசிரியர் கோபால் ஆகியோர் பொடாவில் கைது செய்யப்பட்டதுசரியா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறது பொடா மறு ஆய்வுக் குழு.
இதையடுத்து இக் குழுவின் அதிகார வரம்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.வைகோ, கோபால் மீதான பொடா வழக்குகளை பூந்தமல்லி நீதிமன்றம் விசாரித்து வரும் நிலையில் இந்தக் குழுவழக்குகளில் தலையிட அதிகாரம் இல்லை என்று தமிழக அரசு தனது மனுவில் கூறியிருந்தது.
இநத் மனுவை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி வி.என்.காரே இன்று விசாரித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: இந்த மனு மீது வரும் மார்ச் 8ம் தேதி விசாரணை நடக்கும். அதே நேரத்தில்பொடா மறு ஆய்வுக் குழு திட்டமிட்டபடி, வரும் 19ம் தேதி வைகோ, கோபால் ஆகியோர் மீதான விசாரணையைநடத்தலாம்.
ஆனால், தமிழக அரசின் மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் தொடங்கும் வரை (மார்ச் 8 வரை) வைகோ,கோபால் விஷயத்தில் இறுதி முடிவு எதையும் பொடா மறு ஆய்வுக் குழு எடுக்கக் கூடாது என்றார்.


Click it and Unblock the Notifications
