காங்கிரசுக்கு பாண்டிச்சேரியை விட்டுத் தர ராமதாஸ் முரண்டு
சென்னை:
புதுவை உள்ளிட்ட 6 தொகுதிகளுக்கான பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலும், தேர்தல்அறிக்கையும் அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
பாண்டிச்சேரி தொகுதியை காங்கிரசுக்கு விட்டுக் கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் கூறினார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், புதுவை உள்ளிட்ட 6 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கானபாமக வேட்பாளர்கள் பட்டியல் அடுத்த வாரம் அறிவிக்கப்படும். பாண்டிச்சேரி முடிந்துபோன விவகாரம். அதைமீண்டும் கிளற நான் தயாராக இல்லை. அங்கு பா.ம.க. தான் போட்டியிடும்.
உண்மையில் பார்த்தால், சோனியா காந்தியை பிரதமராக்கத் தான் பா.ம.க. இந்தக் கூட்டணியில் உள்ளது. அப்படிஇருக்கையில் பா.ம.கவை எப்படி காங்கிரசார் தனியாகப் பார்க்கலாம். சோனியா பிரதமராவதில் அவர்களுக்குஆர்வமில்லையா?. பா.ம.கவின் வெற்றிக்குப் பாடுபட வேண்டிய கடமை காங்கிரசாருக்கு உண்டு.
தேர்தலின்போது வன்முறையைத் தூண்ட ஆளுங்கட்சி திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. எனவே வாக்குப்பதிவின்போது அண்டை மாநில போலீஸாரையும் அனைத்துத் தொகுதிகளிலும் நிறுத்த தேர்தல் கமிஷன்நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் ஒரே நாளில் வாக்குப் பதிவை நடத்தி முடிக்க வேண்டும். வருகிற 20ம் தேதி தேர்தல் ஆணையம்ஏற்பாடு செய்துள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இந்தக் கோரிக்கைகளை நாங்கள் வலியுறுத்துவோம் என்றார்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications