வறட்சியால் காலியாகும் தமிழக கிராமங்கள்
மதுரை & திருச்சி:
போலி வாக்காளர்கள் தொடர்பாக மதுரை மாவட்டத்தில் தேர்தல் கமிஷன் நடத்திய ஆய்வின்போது ஒருபீதியூட்டும் உண்மை வெளிப்பட்டது.
மாவட்டத்தின் கடும் வறட்சி காரணமாக பல்வேறு ஏழை, விவசாய, கூலித் தொழிலாளர்கள் குடும்பம் குடும்பமாகஊரை விட்டே வெளியேறியுள்ளனர். வறட்சியால் தமிழகத்தின் வேறு எநத்ப் பகுதியிலும் வேலை வாய்ப்புக்கள்இல்லாததால் அவர்கள் வட மாநிலங்களிலும், ஆந்திரா, கர்நாடகத்திலும் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இதனால் பல்வேறு கிராமங்களில் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்ற நூற்றுக்கணக்கான குடும்பங்கள் அங்குஇல்லை. ஆனால், இவர்களை பட்டியலில் இருந்து நீக்க வேண்டிய அதிகாரிகள் அதைச் செய்யவில்லை.
முதியோரும், உடல் ஊனமுற்றவர்களையும் மட்டும் விட்டுவிட்டு பல குடும்பங்கள் பிழைப்பு தேடி ஊரையே காலிசெய்து கொண்டு வெளியேறியுள்ளன.
பலர் திருப்பூர், கோவை போன்ற இடங்களில் ஜவுளி ஆலைகளில் வேலைகளில் சேர்ந்தாலும் பெரும்பாலனவர்கள்ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களிலும் வட மாநிலங்களுக்கும் கூலி வேலைக்காகசென்றுள்ளனர்.
விவசாய வேலைகளே நடக்காத நிலையில் சாப்பாட்டுக் கூட சிரமமப்படும் பிற விவசாயக் குடும்பங்கள் தங்களிடம்உள்ள விவசாயக் கருவிகளை வட மாநில ஏஜென்டுகளிடம் விற்க ஆரம்பித்துள்ளனர். நிலத்தை உழபயன்படுத்தப்படும் டீசல் மோட்டார் கொண்ட டிரில்லர்கள் தான் மிக அதிகமாக இவ்வாறு விற்கப்படுகினறன.
தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் இருந்து மட்டும் மாதம் ஒன்றுக்கு 30 டிரில்லர்களை ஏஜென்டுகள் வாங்கிச்செல்வதாக சரக்கு லாரி உரிமையாளர்கள் சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிய டிரில்லர்களின் விலை ரூ.80,000 வரை உள்ள நிலையில் பழைய டிரில்லர்களை ரூ. 20,000 முதல் ரூ. 30,000 வரை விவசாயிகள் விறறுவருகின்றனர்.
இவை பஞ்சாப், மேற்குவங்கம் போன்ற மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன.
இவற்றை வாங்கி விற்க இந்த இரு மாவட்டங்களில் மட்டும் 15க்கும் மேற்பட்ட ஏஜென்டுகள் உள்ளார்களாம்.
இந்தியா ஒளிர்கிறது!! என பத்திரிக்கைகள், டிவியில் கோடிக்கணக்கான செலவில் விளம்பரங்கள் வந்தாலும்தமிழக கிராமங்களின் நிதர்சனமான நிலை இது தான்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications