பா.ஜ.கவுக்கு 7 தொகுதிகளை ஒதுக்கினார் ஜெ: புதுக்கோட்டையை தரவில்லை
சென்னை:
அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்துள்ள பாரதீய ஜனதாக் கட்சிக்கு 7 தொகுதிகளை முதல்வர் ஜெயலலிதாஒதுக்கியுள்ளார். இதில் புதுக்கோட்டை இடம்பெறவில்லை.
ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் விவரம்:
வட சென்னை, சிதம்பரம் (தனி), தர்மபுரி, நீலகிரி, கோவை, நாகர்கோவில் மற்றும் பாண்டிச்சேரி ஆகியவை. இத்தகவலை ஜெயலலிதா அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
அதிமுக, பா.ஜ.க இடையே கடந்த சில நாட்களாக நடந்து வந்த தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நேற்றுசுமூகத் தீர்வுக்கு வந்தது. மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ஜெயலலிதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதும்தொகுதிப் பங்கீடு தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டது.
இந் நிலையில் இன்று பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகளை அதிமுக அறிவித்துள்ளது. இதில் நீலகிரி, கோவை,நாகர்கோவில் தொகுதிகள் கடந்த முறை பா.ஜ.க. வென்றவையாகும். அந்தத் தொகுதிகள் திரும்பத்தரப்பட்டுவிட்டன.
எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே திருநாவுக்கரசரின் புதுக்கோட்டைத் தொகுதி பா.ஜ.கவுக்கு தரப்படவில்லை.
அதிமுக அறிவித்துள்ள தொகுதிகளில் பா.ஜ.கவுக்கு அதிர்ச்சி தரும் சில தொகுதிகளும் உள்ளன. வட சென்னை,சிதம்பரம், தர்மபுரி, பாண்டிச்சேரியில் பா.ஜ.க.வுக்கு சற்றும் வெற்றி வாய்ப்பு இருக்காது என்று கூறப்படுகிறது.கடந்த முறை திமுக கூட்டணியில் பா.ஜ.க. 6 தொகுதிகளில் போட்டியிட்டது.
இப்போது பா.ஜ.கவுக்கு ஒதுக்கப்பட்ட இந்த 7 தொகுதிகள் தவிர, மற்ற 33 தொகுதிகளும் அதிமுகபோட்டியிடுகிறது.
இதன் முலம் தமிழகத்திலேயே இந்தத் தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிடும் கட்சி அதிமுக தான். திமுகவெறும் 15 இடங்களில் தான் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தலைமைக்கு கட்டுப்படுவேன்: திருநாவுக்கரசர்
புதுக்கோட்டை தொகுதியை விட்டுத் தரும் பா.ஜ.க. தலைமையின் முடிவுக்கு, தான் கட்டுப்படுவதாக மத்தியஅமைச்சர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
தற்போது டெல்லியில் இருக்கும் அவர், அதிமுக, பா.ஜ.க இடையே தொகுதிப் பங்கீடு ஏற்பட்டுள்ளது குறித்தும்மகிழ்ச்சி தெரிவித்தார்.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications