கேட்டது 12.. கிடைச்சது 7...: கழற்றிவிடப்பட்ட அரசர்
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா விதித்த நிபந்தனைகளை ஏற்பதாக பா.ஜ.க. தலைவரும் மத்திய அமைச்சருமான சுஷ்மாசுவராஜ் நேரில் வந்து தெரிவித்ததையடுத்து இன்று அக் கட்சிக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன.
முன்னதாக இன்று காலை ராதாகிருஷ்ணன், இல.கணேசன், சுகுமாறன் நம்பியார் ஆகியோர் அடங்கிய பா.ஜ.கதேர்தல் குழுவும், அமைச்சர்கள் பன்னீர்செல்வம், பொன்னையன், ஜெயக்குமார் ஆகியோர் அடஙகிய அதிமுகதேர்தல் குழுவும் மீண்டும் சந்தித்துப் பேசி தொகுதி உடன்பாட்டில் கையெழுத்திட்டது.
புதுக்கோட்டை உள்பட பல்வேறு விவகாரங்களால் அதிமுக, பா.ஜ.க. இடையே தொகுதி உடன்பாடு ஏற்படுவதில்சிக்கல் நீடித்து வந்தது. இந்தத் தேர்தல் குழுவினர் பலமுறை சந்தித்துப் பேசியும் முடிவு ஏற்படவில்லை. இந்நிலையில் பிரதமர் தலைமையில் கூடிய பா.ஜ.க. அரசியல் விவகாரக் குழு அதிமுகவின் நிபந்தனைகளை ஏற்பதுஎன்று முடிவு செய்தது.
இக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளோடு நேற்றிரவு மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சென்னை வந்தார்.பின்னர் ஜெயலலிதாவை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
நிபந்தனைகளுக்கு உட்படுவதாக பா.ஜ.க. தரப்பில் உறுதிமொழி தரப்பட்டதையடுத்து இன்று அக் கட்சிக்குஇடங்களை ஒதுக்குவதாக ஜெயலலிதா அறிவித்தார். இச் சந்திப்பின்போது தமிழக பா.ஜ.க. தலைவர்ராதாகிருஷ்ணனும் பவ்யமாக உடனிருந்தார்.
மேலும் இன்று ஜெயலலிதாவுடன் துணைப் பிரதமர் அத்வானியும், பா.ஜ.க. தலைவர் வெங்கைய்யா நாயுடுவும்தொலைபேசியில் பேசியதாகவும் தெரிகிறது. அதன் பின்னர் அந்தக் கட்சிக்கான தொகுதிகளை ஜெயலலிதாஅறிவித்துள்ளார்.
12 தொகுதிகள் வரை கேட்ட பா.ஜ.கவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் நாம் ஏற்கனவேகுறிப்பட்டத்தைப் போல புதுக்கோட்டை தொகுதி இல்லை.
ராதாகிருஷ்ணனுக்கு திருப்தி:
கூட்டணியில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் திருப்தியளிப்பதாக பா.ஜ.க. மாநிலத் தலைவர்ராதாகிருஷ்ணன் கூறினார்.
தொகுதிகளை ஜெயலலிதா அறிவித்த பின் நிருபர்களிடம் அவர் பேசுகையில், இதில் எங்களுக்கு முழுத் திருப்திதான் என்றார்.
புதுக்கோட்டை கிடைக்கவில்லையே என்று நிருபர்கள் கேட்டபோது, கூட்டணி என்று வந்துவிட்டால் விட்டுக்கொடுத்து தானே போக வேண்டும். இந்த 7 தொகுதிகளுக்குமான வேட்பாளர் பட்டியலை கட்சித் தலைமைவெளியிடும் என்றார்.
எப்படியோ பா.ஜ.கவால் திருநாவுக்கரசர் விட்டுக் கொடுக்கப்பட்டுவிட்டார்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications