ஜெவை சந்தித்தார் சுஷ்மா: பா.ஜ.கவுக்கு இன்று தொகுதிகள் ஒதுக்கீடு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முதல்வர் ஜெயலலிதா விதித்த நிபந்தனைகளை ஏற்பதாக பா.ஜ.க. தலைவரும் மத்திய அமைச்சருமான சுஷ்மாசுவராஜ் நேரில் வந்து தெரிவித்ததால், இன்று அக் கட்சிக்கு இடங்களை ஒதுக்கப்படவுள்ளது.

புதுக்கோட்டை உள்பட பல்வேறு விவகாரங்களால் அதிமுக, பா.ஜ.க. இடையே தொகுதி உடன்பாடு ஏற்படுவதில்சிக்கல் நீடித்து வந்தது. இந் நிலையில் பிரதமர் தலைமையில் கூடிய பா.ஜ.க. அரசியல் விவகாரக் குழு அதிமுகவின்நிபந்தனைகளை ஏற்பது என்று முடிவு செய்தது.

இக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளோடு நேற்றிரவு மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சென்னை வந்தார்.பின்னர் ஜெயலலிதாவை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

நிபந்தனைகளுக்கு உட்படுவதாக பா.ஜ.க. தரப்பில் உறுதிமொழி தரப்பட்டதையடுத்து இன்று அக் கட்சிக்குஇடங்களை ஒதுக்குவதாக ஜெயலலிதா அறிவித்தார்.

இச் சந்திப்பின்போது தமிழக பா.ஜ.க. தலைவர் ராதாகிருஷ்ணனும் பவ்யமாக உடனிருந்தார்.

அத்வானி-நாயுடு இன்று பேச்சு:

மேலும் இன்று ஜெயலலிதாவுடன் துணைப் பிரதமர் அத்வானியும், பா.ஜ.க. தலைவர் வெங்கைய்யா நாயுடுவும்தொலைபேசியில் பேச்சு நடத்தவுள்ளனர். அதன் பின்னர் அந்தக் கட்சிக்கான தொகுதிகளை ஜெயலலிதாஅறிவிப்பார்.

12 தொகுதிகள் வரை கேட்ட பா.ஜ.கவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்படுகிறது. இதில் புதுக்கோட்டை இருக்காது.

ஜெயலலிதாவை சந்தித்துவிட்டு வெளியே வந்த சுஷ்மா நிருபர்களிடம் பேசுகையில், ஜெயலலிதாவுடன் பேசியவிவரங்களை அத்வானி, நாயுடுவிடம் தெரிவிப்பேன். அதன் பின்னர் இதில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.

செய்தியாளர்களிடம் ஜெயலலிதா பேசுகையில், தொகுதி உடன்பாடு குறித்து நாளை (இன்று) முறைப்படிஅறிவிக்கப்படும். இதற்கு மேல் எதையும் சொல்ல முடியாது என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+