லோக்சபா to

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அதிமுக கூட்டணியில் புதுக்கோட்டை தொகுதி கிடைக்காததால் வட மாநிலம் ஏதாவது ஒன்றிலிருந்து மத்தியஅமைச்சர் திருநாவுக்கரசரை ராஜ்யசபா எம்.பியாக்க பா.ஜ.க. முடிவு செய்துள்ளது. அதே போல ப.சிதம்பரத்தையும்ராஜ்யசபா எம்.பியாக்குவதாக காங்கிரஸ் கட்சி பேரம் பேசி வருகிறது.

காங்கிரசிடம் சிவகங்கை தொகுதியைக் கேட்டு வருகிறார் சிதம்பரம். ஆனால், இருப்பதே 10 சீட். அதை காங்கிரஸ்முக்கியஸ்தர்களுக்கு பிரித்துத் தருவதே பெரும் கஷ்டம். இதில் நீங்கள் வேறா என்று காங்கிரஸ் டெல்லி தலைகள்நேரடியாகவே சிதம்பரத்திடம் கேட்டுவிட்டனர்.

ஆனால், சோனியாவுடன் தனக்குள்ள நெருக்கத்தைப் பயன்படுத்தி சீட் கேட்டு நச்சரித்து வருகிறார் சிதம்பரம்.இப்போது லண்டனில் உள்ள அவர் தொடர்ந்து சோனியாவுடன் பேசி வருகிறார்.

இந் நிலையில் பா.ஜ.க. பாணியில் காம்ப்ரமைஸ் பார்முலாவை சோனியா முன் வைத்துள்ளதாகத் தெரிகிறது.தமிழகத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் காங்கிரசுக்காக சிதம்பரம் பிரச்சாரம் செய்ய வேண்டும். அதற்குப்பிரதிபலனாக தமிழகத்தில் இருந்தோ அல்லது வேறு மாநிலத்தில் இருந்து அவரை ராஜ்யசபா எம்.பியாக்குவதுஎன்பது தான் அந்த சமரசத் திட்டம்.

தமிழகத்தில் எதிர்க் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்தால் 2 ராஜ்யசபா எம்.பிக்களைத் தேர்வு செய்ய முடியும்.இதில் ஒன்றை பா.ம.கவுக்கு விட்டுத் தருவதாக திமுக கூறியுள்ளது. அதே நேரத்தில் திமுகவிடம் உபரி ஓட்டுக்கள்இருக்கும். அதையும், காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் வாக்குகளையும் வைத்து சிதம்பரத்தை ராஜ்யசபாவுக்கு அனுப்பமுடியும்.

இந்தத் திட்டத்துக்கு சிதம்பரம் ஒத்துக் கொண்டால், அது குறித்து திமுக தலைவர் கருணாநிதியுடன் பேசுவதாகவும்சோனியா தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் பிரச்சாரத்துக்கு வந்தால் அவருடன் ரஜினி ரசிகர்களும் களமிறங்குவார்கள் என்பதால், இதை திமுகவும்ஏற்கும் என்றே தெரிகிறது. ஆனால், தனது மகன் கார்த்திக்கையும் அரசியலில் நுழைத்து வரும் சிதம்பரம்,சிவகங்கை தொகுதி தன் வசம் இருப்பது நல்லது என்று நினைக்கிறார்.

இதனால் அவர் ராஜ்யசபா சீட்டுக்கு ஒப்புக் கொள்வது மிகக் கடினமே என்கிறது காங்கிரஸ் ஜனநாயகப் பேரவைவட்டாரம்.

சிதம்பரத்துக்காவது தமிழகம் வழியாகவே ராஜ்யசபா செல்ல வாய்ப்புள்ளது. ஆனால், மத்திய அமைச்சர்திருநாவுக்கரசரின் நிலைமை தான் மிகவும் பரிதாபம். பா.ஜ.கவை நம்பி கட்சியைக் கலைத்துவிட்டுஐக்கியமானவரை தமிழகத்தில் எந்தத் தொகுதியிலும் நிறுத்தக் கூடாது என்று அதிமுக நிபந்தனை போட்டுவிட்டது.

புதுக்கோட்டை இல்லாவிட்டால் வேறு ஏதாவது ஒரு தேவர் பெல்ட் தொகுதியை கேட்டு வாங்கி அதில் இவரைநிறுத்த பா.ஜ.க திட்டமிட்டிருந்தது. ஆனால், அவருக்கு ஒட்டுமொத்தமாக முதல்வர் ஜெயலலிதா தடாபோட்டுவிட்டதால், தமிழகத்தை விட்டுத் தாண்டி வேறு ஏதாவது வட மாநிலத்தில் இருந்து தான் ராஜ்யசபாவுக்குப்போக முடியும் என்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளார் திருநாவுக்கரசர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+